விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பெற்றார் பெற்றுஒழிந்தார்*  பின்னும்நின்று அடியேனுக்கு*
  உற்றான்ஆய் வளர்த்து*  என்உயிர்ஆகி நின்றானை*
  முற்றா மாமதிகோள் விடுத்தானை*  எம்மானை*
  எத்தால் யான்மறக்கேன்*  இதுசொல்என் ஏழைநெஞ்சே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

முற்றா மா மதி - பருவம் நிரம்பாத சந்திரனுடைய
கோள் - க்ஷயரோகத்தை
விடுத்தானை - போக்கினவனுமான
எம்மானை - எம்பெருமானை
எத்தால் - எக்காரணம்பற்றி

விளக்க உரை

சரீரபிண்டத்தை மாத்திரமே உற்பத்தி பண்ணுமவர்களான மாதாபிதாக்கள் என்னைப் பெற்றுப் போட்டுப் போய்விட்டார்கள்; ஞானபக்தி முதலிய குணங்கள் எனக்கு வளர்தற்குரிய வழிகளில் ஒரு முயற்சியும் அவர்கள் செய்தார்களில்லை. இப்படி அவர்கள் கைவிட்டகாலத்தில் எனக்கு எல்லாவுறவுமுறையாய் நின்று என்னை வளரச்செய்து வருகின்ற எம்பெருமானை நெஞ்சே! என்ன காரணம் பற்றி மறந்தொழிய முடியும்? சொல்லாய் என்று தம் திருவுள்ளத்தோடு உலாவுகிறார். எத்தால் யான் மறக்கேன் = எம்பெருமான் நமக்கு ஒரு நன்மையும் செய்யவில்லையென்கிற காரத்தினால் மறக்கவோ? அல்லர், அற்பமான உபகாரமே நமக்குப் பண்ணியிருக்கிறானென்று கொண்டு மறக்கவோ? நம்மை ரக்ஷிக்கவல்லார் பிறருளரென்று கொண்டு அவனை மறக்கவோ?

English Translation

O. Frai! Heart! My parents begot me and left. Thereafter the Lord remained with me as my only relative. He brought me up and become my very soul. He removed the curse of waning on the crescent Moon. Now with what do I forget him? Tell me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்