விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கனம்செய் மாமதிள் கணபுரத்து அவனொடும்*  கனவினில் அவன்தந்த,* 
  மனம்செய் இன்பம்வந்து உள்புக வெள்கி*  என் வளைநெக இருந்தேனை,*
  சினம்செய் மால்விடைச் சிறுமணி ஓசை*  என் சிந்தையைச் சிந்துவிக்கும்,* 
  அனந்தல் அன்றிலின் அரிகுரல்*  பாவியேன் ஆவியை அடுகின்றதே!   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கனம் செய் - திண்ணிதாகச் செய்யப்பட்டுள்ள
மா மதிள் - பெரிய திருமதில்களையுடைத்தான
கணபுரத்து - திருக்கண்ணபுரத்திலெழுந்தருளியிருக்கிற
அவனொடும் - அப்பெருமானோடு கூடியிருப்பதாக
கனவினில் - ஸ்வப்நத்திலே

விளக்க உரை

இங்ஙனே துடிக்கின்ற பரகால நாயகிக்கு ஒருவகையான தேறுதலுண்டாகும்படி எம்பெருமான் மாநஸிகமான அநுபவத்தைத் தந்து இன்பமு் விளைவிக்க, தரித்ரனாயிருப்பானொருவன் பெருஞ்செல்வம் பெற்றதாகக் கனாக்கண்டு கண்விழித்தவாறே ஒன்ற மில்லாமை கண்டு முன்னிலும் விஞ்சிய வருத்தத்தை யடையுமாபோலே இப்பரகாலநாயகியும் ஸ்வப்நகல்பமான அவ்வநுபவத்தினால் பின்னையுந் தளர்ந்திருக்குமளவில் விடைமணியோசையும் அன்றிற் பறவையின் கூக்குரலும் செவிப்பட்டு இன்னமும் நலிகிறபடி பேசிற்றாயிற்று.

English Translation

The heart's delight that the Lord of strong-high-walled Tirukkannapuram gave me in my dream haunts me; making my bangles slip. The sound of the angry big bull's neck-bell scatters my thoughts. The lazy Anril bird's harsh coo kills my sinful self's soul, O, alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்