விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  முழுது இவ்வையகம் முறைகெட மறைதலும்*  முனிவனும் முனிவுஎய்த,* 
  மழுவினால் மன்னர் ஆர்உயிர் வவ்விய*  மைந்தனும் வாரானால்,*
  ஒழுகு நுண்பனிக்கு ஒடுங்கிய பேடையை*  அடங்க அம்சிறைகோலித்,* 
  தழுவும் நள்இருள் தனிமையின் கடியதுஓர்*  கொடுவினை அறியேனே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இ வையகம் - இந்த லோகமானது
முழுது - அடங்கலும்
முறை கெட மறைதலும் - மரியாதை குலைந்து போனதனால்
முனிவனும் - ஜமதக்நி முனிவன்
முனிவு எய்த - சீற்றங்கொள்ள (அது காரணமாக)

விளக்க உரை

உலகத்தில் எவரும் அழிப்பவரில்லாமையால் கொழுத்துத் திரிந்து கொடுமை யியற்றிவந்த க்ஷத்ரிய வம்சங்கள் பலவற்றை நாசஞ் செய்தற் பொருட்டு நாராயணமூர்த்தி ஜமதக்நி முனிவரது மனைவியான ரேணுகையிடம் இராமனாய்த் திருவவதரித்துப் பரசு என்னுங் கோடாலிப்படையை ஆயுதமாகக் கொண்டு அதனாற் பரசுராமனென வழங்கப்பெற்று வருகையில், ஒருநாள் கார்த்தவீர்யார்ஜுநனும் அவனது குமாரர்களும் ஜமதக்நியின் ஆச்ரமத்தில் இளைப்பாறப்புகுந்த காலத்து அங்கே அம்முனிவனது ஹோமதேநுவானது வேண்டின வஸ்துக்களை யெல்லாம் யதேஷ்டமாக அளித்துக் கொண்டிருப்பதைக் கண்ட இவர்கள் அப்பசுவைக் கொள்ளைகொள்ள விரும்பி அதனைக் கவர்ந்து அம்முனிவனையுங் கொன்றிட்டது காரணமாக (ப் பரசுராமன்) அந்தக் காரத்த வீர்யார்ஜுநனையும் அவனது குமாரர்களையுங் கொன்று அதனாலேயே க்ஷத்ரிய வம்சம் முழுவதன் மேலும் கோபாவேசங்கொண்டு உலகத்திலுள்ள அரசர்கள் பலரையும் இருபத்தொரு தலைமுறை பொருது ஒழித்திட்டானென்ற வரலாறு இங்கு உணரத்தக்கது. பறவையினங்களும் குளிர்க்கு அஞ்சி ஒடுங்கிக்கிடக்கும் பேடையைச் சிறகினால் அணைத்து ஒன்றிக்கிடக்கும்படியான இந்த நள்ளிருட்போதிலே நாயகனைப் பிரிந்து பரிதபியா நின்ற என்னைப்போலவே பாவஞ்செய்தாரு முலகிலுண்டோ என்கிறாள் பின்னடிகளில். நாயகனைப் பிரிந்து தனிக்கிடை கிடப்பதற்கு மேற்பட்ட பாபமில்லை யென்கிறாள்.

English Translation

When the whole world was berefit of Dharma and the ascetic father was angry, my Prince destroyed mighty kings with his battleaxe; he does not come now, alas! In the darkness of the night, the female swan shelters itself from the dropping dew by snuggling under the male swan's wings. Nothing can be more cruel than this solitude of mine.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்