விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  முரியும் வெண்திரை முதுகயம் தீப்பட*  முழங்குஅழல் எரிஅம்பின்,* 
  வரி கொள் வெம் சிலை வளைவித்த மைந்தனும்*  வந்திலன் என்செய்கேன்,*
  எரியும் வெம்கதிர் துயின்றது*  பாவியேன் இணைநெடுங் கண்துயிலா,*
  கரிய நாழிகை ஊழியின் பெரியன*  கழியும்ஆறு அறியேனே!  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இணை நெடுங்கண் துயிலா - பெரிய இரண்டு கண்களும் உறங்குகின்றனவில்லை;
ஊழியின் - கல்ப காலத்திற்காட்டிலும்;
பெரியன - பெரியவையாயுள்ள
கரிய நாழிகை - இரவு நாழிகைகள்
கழியும் ஆறு அறியேன் - எப்படி கழியப் போகின்றனவோ அறிகின்றிலேன்.

விளக்க உரை

ஸூர்யனும் அஸ்தமித்து விட்டான்; இரவிலே உறக்கம் வரவேண்டியது ப்ராப்தமாயிருந்தும் பாவியேனுடைய கண்கள் உறங்குகின்றில; 1.“நீளிரவும், ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்” என்னுமாபோலே பிரளயராத்ரியினும் நெடுகிச் செல்கின்ற இவ்விராப்பொழுது எங்ஙனங் கழியப்போகின்றதோ அறிகின்றிலேன் என்கிறார் பின்னடிகளில். கரிய நாழிகை = இராப்பொழுதானது இருண்டு கறுத்திருப்பதனால் நாழிகையிலும் அக்கருமை ஏற்றிக் கூறப்பட்டது. கரிய நாழிகை – கொடிதான நாழிகை என்னவுமாம்.

English Translation

The white frothing ocean is on fire, the Prince who shot fire arrows from his beautiful bow has not come, alas! What shall I do? The bright sun has gone to sleep. My beautiful large eyes do not go to sleep. I know not how to pass the longer-than-an-era night.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்