விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மாரி மாக்கடல் வளைவணற்கு இளையவன்*  வரைபுரை திருமார்வில்,* 
  தாரின் ஆசையில் போயின நெஞ்சமும்*  தாழ்ந்ததுஓர் துணைகாணேன்,*
  ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது*  ஒளியவன் விசும்புஇயங்கும்,* 
  தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன*  செய்வது ஒன்று அறியேனே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

விசும்பு - ஆகாசத்திலே
இயங்கும் - ஸஞ்சரிக்கின்ற
ஒளியவன் தேரும் - ஸூர்யனது தேரும்
போயிற்று - மறைந்து போயிற்று;
திசைகளும் - திக்குக்களும்

விளக்க உரை

‘தாரினாசையிற்போயின் நெஞ்சமும் தாழ்ந்தது’ என்றது – என்னுடைய நெஞ்சானது அப்பெருமான் திருமார்பிலணிந்த திருத்துழாய்மாலையைப் பெறுதற்கே பேராசை கொண்டிருக்கின்றது என்றவாறு. இப்படிப்பட்ட ஆசையுடையார் மற்று எவருமில்லாமையாலும், வேறுவகையான ஆசையுடையாரோடு தனக்குச் சேர்த்தி யில்லாமையாலும் ‘ஓர் துணை காணேன்’ என்றது. ‘ஊருந்துஞ்சிற்று உலகமும் துயின்றது’ என்றதற்கு ஸ்வாபதேசப்பொருள் கூறலாம்; ஆசார்ய ஹ்ருதயத்தில் “ஊரார் நாட்டார் உலகர் கேவலைச்வர்யகாம ஸ்வதந்த்ரர்” என்றருளிச் செய்திருக்கையாலே, கைவல்யார்த்திகளும் ஐச்வர்யார்த்திகளுமாய் ப்ரயோஜநாந்தரபாரா யிருக்கின்ற இவ்வுலகத்தவர்கள் செத்தபிணம் போன்றிருக்கின்றனர்; அவர்களைக் கொண்டு நமக்கொரு காரியமில்லை என்றவாறு. முற்காலத்தில் எம்பெருமானார் திருவடிகளில் ஆச்ரயித்த பிள்ளையுறங்கா வில்லிதாஸர் திருநாட்டுக் கெழுந்தருள’ அவரை ப்ரஹ்மரதத்திலே யெழுந்தருளப் பண்ணிக்கொண்டு செல்ல, அவருடைய தேவியாரான பொன்னாச்சி பிரிவாற்றாமைப் பாசுரமாகிய இத்திருமொழியை அநுஸந்திக்கத் தொடங்கி. முதற்பாசுர மநுஸந்தித்து இரண்டாவதான இப்பாசுர மநுஸந்திக்குமளவிலே முன்னே ப்ரஹ்மரத மெழுந்தருளப் பண்ணிக்கொண்டு செல்பவர்கள் விரைந்து செல்லுகையாலே திருத்தேர் மறைய, அதற்குத் தகுதியாகப் பொன்னாச்சியின் அநுஸந்தானம் “தேரும் போயிற்றுது் திசைகளும் மறைந்தன செய்வதொன்றறியேனே” என்றாக, அப்போதே பொன்னாச்சியின் பிராணனும் தன்னடையே விட்டு நீங்கப்போயிற்று என்ற ஐதிஹ்யம் இங்கு அறியத்தக்கது.

English Translation

Desiring the Tulasi garland on his broad auspicious chest, -he is the younger borhter of the ocean's conch-huel-Balarama, -my heart went to him and never returned. I have no company, the town sleeps, the world too sleeps, alas! The sun has lost himself in the sky; his chariot is missing. The Quarters have disappeared. Alas, I know not what to do!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்