விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கருமாமுகில் உருவா!*  கனல் உருவா! புனல் உருவா* 
  பெருமால் வரை உருவா!*  பிறஉருவா! நினதுஉருவா!*
  திருமாமகள் மருவும்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து* 
  அருமா கடல்அமுதே!*  உனது அடியே சரண்ஆமே*  (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

புனல் உருவா - நீர்போலே குளிர்ந்த வடிவையுடையவனே!
பெரு மால் வரை உருவா - மிகவும் பெரிய மலைபோன்ற உருவத்தையுடையவனே!
பிற உருவா - மற்றுமுள்ள பொருள்களையும் வடிவாக வுடையவனே!
நினது உருவா - உனக்கு அஸாதாரணமான திவ்யமங்களவிக்ரஹத்தை யுடையவனே!
திரு மா மகள் மருவும் - பெரிய பிராட்டியார் பொருந்தி வாழ்கிற

விளக்க உரை

இப்பாசுரத்தின் இனிமை கனிந்த நெஞ்சினரால் நன்கு அனுபவிக்கத்தக்கது. ஆழ்வார் தமது உள்ளன்பு நன்கு விளங்க எம்பெருமானை வாயார விளிக்கின்றார். காணும்போதே ஸகலதாபமும் தீரும்படி பெரிய காளமேகம் போன்ற திருவுருவத்தை யுடையவனே!, தீயபுந்தியையுடைய கம்ஸன்போல்வார்க்குக் கிட்டவொண்ணாதபடி நெருப்புப் போன்றிருப்பவனே!, அக்ரூரர், விதுரர், மாலாகாரர் போல்வாரான மெய்யன்பர்க்குத் தண்ணீர்போலே விரும்பத்தக்க ரூபத்தை யுடையவனே!, மலைபோல் எல்லைகாண வொண்ணாத ப்ரகாரத்தை யுடையவனே!, “நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய், சீரார் சுடர்களிரண்டாய் சிவனாயயனானாய்” “தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்” இத்யாதிப்படியே எல்லாவடிவுமானவனே! இப்படி ஜகதாகாரனாயிருப்பதுந்தவிர “கூராராழி வெண்சங்கேந்தி” என்கிற அஸாதாரண வடிவுகளையுமுடையவனே!, பெரிய பிராட்டியார் நித்யவாஸம் பண்ணப்பெற்ற சிறுபுலியூர்ச் சலசயனத்துப் பரமபோக்யனே! உன் திருவடிகளே சரணம் என்றாராயிற்று,

English Translation

O Lord like the dark raincloud, Lard like the fiercely raging fires, Lord like the cool flowing waters, Lord like the staid mountain range, Lord like none but yourself, Lord adored by the Lotur lady Sri. Resident of Sirupuliyur Salasayanam! O Nectar of the ocean! Your feet are my only refuge.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்