விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வான்ஆர் மதி பொதியும் சடை*  மழுவாளியொடு ஒருபால்* 
  தான்ஆகிய தலைவன் அவன்*  அமரர்க்குஅதிபதிஆம்*
  தேன்ஆர்பொழில் தழுவும்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து 
  ஆன்ஆயனது*  அடிஅல்லது*  ஒன்று அறியேன் அடியேனே*

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அமரர்க்கு அதிபதி ஆம் - தேவர்கட்கு இறைவனான இந்திரனும் தானாயிருப்பவனும்,
தேன் ஆர் பொழில் தழுவும் - தேன் நிறைந்த சோலைகள் தழுவப்பெற்ற
சிறுபுலியூர் - திருச்சிறுபுலியூரிலே
சலசயனத்து - சலசயனமென்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனுமான
ஆன் ஆயனது - கோபாலக்ருஷ்ணனுடைய

விளக்க உரை

சிறு தொண்டர்களிடத்தில் நம்முடைய உபதேசம் பலிப்பது அரிது என்று துணிந்து உபதேசத்தை நிறுத்தித் தமது உறுதியையே இனி வெளியிட்டருளுகிறார். நம்முடைய உறுதியை வெளியிட்டுக் கொண்டோமாகில் இது கேட்டு இவர்கள் திருந்தக்கூடும் என்று நினைத்து அருளிச் செய்கிறாராகவுமாம், “ஏறாளுமிறையோன் திசைமுகனுந் திருமகளுங், கூறாளுந்தனியுடம்பன்” என்கிறபடியே சிவனுக்குத் தன் திருமேனியிலே ஒரு கூறு கொடுத்திருப்பவனும் தேவேந்திரனுக்கு அந்தர்யாமியாயிருந்து ஸ்வர்க்க லோகத்தை யாள்பவனுமான சிறுபுலியூர்ச் சலசயனப் பெருமானது திருவடிகளையன்றி மற்றொன்று மறிகின்றிலே னென்றாராயிற்று.

English Translation

With the crescent Moon-bearing Siva on one side, the self-made Indra on the other, the Lord of gods resides besides nectared groves in Sirupuliyur Salasayanam. He is the cowherd Lord krishna. Other than his lotus feet, I know of no refuge.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்