விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தெருவில் திரிசிறு நோன்பியர்*  செஞ்சோற்றொடு கஞ்சி- 
  மருவிப்*  பிரிந்தவர் வாய்மொழி*  மதியாது வந்துஅடைவீர்*
  திருவில் பொலிமறையோர்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து* 
  உருவக் குறள்அடிகள் அடி*  உணர்மின் உணர்வீரே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வாய் மொழி - வாய்ப்பேச்சுகளை
மதியாது - திரஸ்கரித்து விட்டு
வந்து அடைவீர் - (எம்பெருமானளவிலே) வந்து சேருங்கள்;
திருவில் - செல்வத்தினால்
பொலி - விளங்குகின்ற

விளக்க உரை

சமண மதத்தவர்களுடைய சொற்களை மதியாமல் (அவமதித்து விட்டுச்) சிறுபுலியூர்ச் சலசயனப் பெருமாளுடைய திருவடிகளைச் சிந்தை செய்மின் என்று விவேகிகளை நோக்கி உபதேசிக்கின்றார். சமணமதத்தில் ப்ரஸித்தமாக ஒரு விரதமுண்டு; அதாவது – பெருஞ்சோறுண்ணுதல். (இது வெஞ்சோறுண்ணுதல் எனவும் வேகு சோறுண்ணுதல் எனவும் வ்யவஹரிக்கப்படுமாம்.) தயிர்ச்சோறு, செஞ்சோறு, கஞ்சிக்சோறு, என்றிப்படி சில சோறுகளைத் தின்றுகொண்டு தெருக்களில் திரிந்து கொண்டிருப்பார்களாம்; “தருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை, மிடற்றிடை நெருக்குவார்” என்று கீழ் இரண்டாம்பத்திலும் முதற்றிருமொழியி லருளிச்செய்யப்பட்டது காண்க. இப்படி, ஏதோ விரதஞ்செய்வதாகப் பேரிட்டுக்கொண்டு செஞ்சோற்றையும் கஞ்சியையும் உட்கொண்டு தெருத்திரிகின்ற வைதிககோஷ்டீ பஹிஷ்டர்களின் வாய்மொழிகளைத் திரஸ்கரித்து விட்டு வந்து உற்றது பற்றுங்கள் என்றாராயிற்று. திருவிற்பொலிமறையோர் = திரு என்றது ஐச்வர்யத்தை யாகவுமாம். உருவக் குறளடிகள் = பண்டு வாமநாவதாரஞ் செய்தருளின பெருமானே இங்கு அர்ச்சையாயெழுந்தருளியிருக்கிறனென்கை. அடிகள்-ஸ்வாமி.

English Translation

Street-roaming Small-austerites-performing gruel-drinking heretics say things that deserve to be ignored. Come join us, the wealth-resplendent Lord, extalled by Vedic seers, resides in Sirupuliyur salasayanam; if you can, contemplate the little big feet of the Earth-measuring manikin.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்