விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நெல்லில் குவளை கண் காட்ட*  நீரில் குமுதம் வாய் காட்ட *
  அல்லிக் கமலம் முகம் காட்டும்*  கழனி அழுந்தூர் நின்றானை*
  வல்லிப் பொதும்பில் குயில் கூவும்*  மங்கை வேந்தன் பரகாலன்* 
  சொல்லில் பொலிந்த தமிழ்மாலை*  சொல்ல பாவம் நில்லாவே*. (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நெல்லில் - நெற்பயிரினிடையே (முளைத்த)
குவளை - கருநெய்தற் பூக்கள்
கண் காட்ட - (அவ்வூர் பெண்களது) கண்கள் போன்றுவிளங்கவும்
நீரில் - நீரிலே முளைத்த
குமுதம் - ஆமபல் பூக்கள்

விளக்க உரை

நெல்லுக்குக் களையாக முளைத்த குவளைப்பூக்கள் அவ்வூரிலுள்ள மாதர்களின் கண்போலவும், நீர்நிலங்களிலுண்டான அரக்காம்பல்கள் அவர்களின் அதரம் போலவும், தாமரைப்பூக்கள் அவர்களது முகமண்டலம் போலவும் தோன்றப்பெற்ற வயல்களாற் சூழப்பட்ட திருவழுந்தூரில் நித்யவாஸஞ்செய்தருளா நின்ற ஆமருவியப்பன் விஷயமாகத் திருமங்கையாழ்வா ரருளிச்செய்த இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்களுக்குப் பாவங்களெல்லாம் தொலைந்துபோமென்று பயனுரைத்தாராயிற்று.

English Translation

This garland of pure Tamil songs by Parakalan, king of Mangai where cuckoos haunt in bushes, is addressed to the Lord of Alundur where the blue lily of the paddy field shows the dark eyes of the dames, the red lily of water shows their eyes and the lotus flower shows their faces, Those who master it will have no karmas.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்