விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மாலைப் புகுந்து மலர்அணைமேல்*  வைகி அடியேன் மனம் புகுந்து*  என்- 
  நீலக் கண்கள் பனி மல்க*  நின்றார் நின்ற ஊர்போலும்*
  வேலைக் கடல்போல் நெடு வீதி*  விண் தோய் சுதை வெண் மணி மாடத்து* 
  ஆலைப் புகையால் அழல் கதிரை மறைக்கும்*  வீதி அழுந்தூரே*    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வேலை கடல் போல - கரையையுடைய ஸமுத்ரம் போல
நெடு -நீண்டிருக்கின்ற
வீதி - வீதிகளிலுண்டான
விண் தோய் - ஆகாசத்தளவு மோங்கியிருக்கிற
சுதை வெண்மணி மாடத்து - சாந்திட்டு வெளுத்திருக்கின்ற திருமாளிகைகளின் மேல்

விளக்க உரை

இதுமுதல் மேல் மூன்று பாசுரங்களிலும் ஆழ்வார்க்கு நாயகி பாவனை நிகழ்வதாகக் கொள்ளத்தகும். என்னோடு கலவிசெய்ய விருப்பங்கொண்டு அதற்கு உரிய மாலைப் பொழுதிலே வந்து சேர்ந்து மென்மலர்ப் பள்ளியிலே தங்கி, அவ்விருப்பில் த்ருப்தி பெறாதே என்னுடைய ஹ்ருதயத்தினுள்ளே ஏகதத்துவமாகப் புகுந்து, கலவியானது பிரிவோடே சேர்ந்தல்லது இருக்கமாட்டாதாகையாலே உடனே பிரிந்து போவதாகப் பிரஸ்தாவித்து, அவ்வளவிலே எனது கண்களில் நின்றும் நீர் பெருக, அதைக்கண்டு ‘இவ்வளவு ஆற்றாமையிலே இந்த நாயகியை எங்ஙனம் விட்டுப் பிரிவது?’ என்று கலங்கிக் கால் பெயர்ந்து போக மாட்டாதே நின்றவர் நித்யவாஸம் பண்ணுகிற திவ்யதேசம் திருவழுந்தூர். அவ்விடத்தில் ஒவ்வொரு திருவீதியும் கடல்போன்று பெருமை பொருந்தியிருக்கும். சாந்திட்டு வெண்ணிறமா யிருக்கின்ற மணிமாடங்கள் விண்ணுலகத்தளவும் ஓங்கியிருக்கும். ஸூர்ய கிரணங்களைக் கரும்பாலைப்புகை வந்து மறைத்து எங்கும் நிழல் செய்யும். இது வாயிற்று அவ்வூர்ப் பெருமை.

English Translation

The fall white mansions lining the ocean-like-long and wide streets are hid from the light of the Sun by the blanket of smoke rising from the sugar-making funances in beautiful Alundur, It is the residence of the Lord who came at dusk, lay on his bed of flowers, then entered my heart and made my dark eyes brim with tears.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்