விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பாரித்து எழுந்த*  படை மன்னர் தம்மை மாள பாரதத்து- 
  தேரில் பாகன் ஆய் ஊர்ந்த*  தேவதேவன் ஊர்போலும்* 
  நீரில் பணைத்த நெடு வாளைக்கு*  அஞ்சிப் போன குருகு இனங்கள்* 
  ஆரல் கவுளோடு அருகு அணையும்*  அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே*.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நீரில் பனைத்த - தண்ணீரில் செழித்து வளர்ந்த
நெடு வாளைக்கு - பெரிய மீன்களுக்கு
அஞ்சி போன - பயப்பட்டு ஓடிப்போன
குருகு இனங்கள்- குருகு என்னும் பறவைக் கணங்கள்
ஆரல் - ஆரல் என்னஞ் சிறுமீனை

விளக்க உரை

பின்னடிகளில் அவ்விடத்து வயல்வளஞ் சொல்லுகிறது. குருகுகளானவை திரள் திரளாக மீன்களைப் பிடிக்க நீர் நிலங்களில் வந்து இழிந்து தம் வாய்க்கு அடங்கக்கூடிய சிறுமீனைப் பிடித்துக் கதுப்பிலே அடக்கிகொண்டிருக்கச்செய்தே வேறேயொரு பெரியமீன் வந்து தோற்ற, அதைப்பிடிக்க அஞ்சி ஓடிப்போய், பின்னையும் ஆசையினால் வந்து கிட்டா நிற்குமென்கை. இந்த வர்ணனையின் உட்கருத்தைப் பெரியவாச்சான் பிள்ளை வெளியிடுகறார் காண்மின் :– “பாரத ஸமரத்தில் பீஷ்மாதிகள் ‘அதிரதர், மஹாரதர் என்றிங்ஙனே பேர்பெற்று ஜீவித்திருந்தோம், இப்போதாகப் பூசல்கோழைகளாக வொண்ணாது’ என்று சாரதி பக்கலிலே வந்து கிட்டுவது, தேர்க்காலிலே உழக்குண்டு போகவொண்ணாதென்று அகலுவதாய்க்கொண்டு அவர்கள் படுவனவற்றைப் படாநின்றனவாய்த்துக் குருகினங்களும்” என்று.

English Translation

The well-armed scheming kings came against our Lord in the Bharata war, but he vanquished them steering the chariot. He is the Lord of gods residing in Alundur surrounded by fertile fields where starks flutter to see the big valai fish, but settle down with the small Aral fish in their beaks.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்