விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஊன் நேர் ஆக்கைதன்னை*  உழந்து ஓம்பி வைத்தமையால்* 
  யான் ஆய் என்தனக்கு ஆய்*  அடியேன் மனம் புகுந்த
  தேனே!*  தீங் கரும்பின் தெளிவே என் சிந்தை தன்னால்* 
  நானே எய்தப் பெற்றேன்*  நறையூர் நின்ற நம்பீயோ!*     

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

யான் ஆய் – எனக்கு அந்தராத்மாவாய்
என் தனக்கு ஆய் – எனக்கு விதேயனாய்க் கொண்டு
அடியேன் மனம் புகுந்து – அடியேனுடைய மனத்தினுட் பிரவேசித்த
தெனே – தேன்போல் இனியவனே!
தீம் கரும்பின் தெளிவே – இனிமையான கரும்பின் சாறுபோன்றவனே!

விளக்க உரை

விசித்ரா தேஹஸம்பத்தி ரீச்வராய நிவேதிதும் – பூர்வமேவ க்ருதா ப்ரஹமந்! ஹஸ்தபாதாதி ஸம்யுதா” என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது; எம்பெருமானுக்கு வழிபாடுகள் செய்தற்காகவே இந்த கரணகளேபரங்கள் தந்தருளப்பட்டன வென்பது அதன் கருத்து; அப்படி பகவத் கைங்கரியத்திற்கே உபகரணமான உடலை நான் பெற்றிருந்தாலும் கீழ்க்கழிந்த காலமெல்லாம் பாழே கழிந்தனவாதலால் அவ்வுடலைக் கொண்டு ஒரு பயனும் பெறா தொழிந்தேன் முன்பெல்லாம்; இவ்வுடலை ச்ரமப்பட்டுப் போஷித்து வந்ததற்குத் தக்கபயன் இன்று பெற்றே னென்கிறார். “ஊனேராக்கை தன்னை உழந்தோம்பி வைத்தமையால் நானே எய்தப்பெற்றேன்” என்று அந்வயிப்பது. மாம்ஸம் மல்கும்படி சரீரத்தைப் பலபரிச்ரமங்கள் பட்டு வளர்த்து வந்தேனாதலால் அதன்பலனை இன்று ஸம்பாதித்துக்கொண்டே னென்கை. – சரீர மாத்யம் கலுதர்மஸாதநம்” என்கிறபடியே தர்மாநுஷ்டாநத்திற்கு இன்றியமையாத சரீரத்தைப் போஷிக்க வேண்டியது அவசியமே; இதுவரை நான் போஷித்து வந்தது பயன்பெறாதொழிந்தது; இப்போது அங்ஙனன்றியே பயன்பெற்றதாயிற்று என்று மகிழ்ந்து பேசினாராயிற்று.

English Translation

I did keep my body flesh for to take and use as fit. By me, for me and with me, you have found a place to be in my heart. Through my contemplation of you, I have held you firmly in me. Sweet as honey, sugarcane juice Naraiyur Lord-in-residence, O!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்