- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
அடியேனுடைய பிரார்த்தனையைத் தலைக்கட்டி யருளாமல் நீ உபேக்ஷிக்குமளவிலும் உன்னையே தொடர்ந்து நான் கூப்பிடும்படியாக இவ்வளவு அருள் என்மேல் செய்து வைத்திருக்கின்றாய்; இப்படிப்பட்ட அருளுக்கு மற்று ஆரேனும் இலக்காக வல்லாருண்டோ? இவ்வருள் பெற்றவன் நானொருவனே யாவன்; இப்படிப்பட்ட அருளை நீ வேறொருவரிடத்தில் செய்வதாயிருந்தாலும் நான் ஸம்மதிக்கமாட்டேன்; உன்னுடைய கிருபையை அநுபவித்து ஒருகாலும் பர்யாப்தி பெறாதவனாகி மேன்மேலும் அபிநிவேச முடையவனாய் அதையே அநுபவித்துச் செருக்குற்று யமாதிகள் அடியிட்டுத் திரியும்படியானேன் என்கிறார். பின்னடிகட்குப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்யான ஸ்ரீ ஸூக்தி காண்மின் :– “ஸௌபரி பல வடிவுகொண்டாப்போலே அநேகம் வடிவுகொண்டு அவ்வோவிடங்கள் தோறும் இனி இதுக்கு அவ்வருகில்லையென்னும்படி வர்த்தியா நின்றான்” என்று. முதலடியில், தாரேன் என்றது – தரவொட்டேன் என்றபடி.
English Translation
You showered your grace on me, I shall not share it with others, Out of love for me, you reside in the Ocean of Milk, on the hills of venkatam and in Tirukkottiyur, I keep drinking that joy without satiation.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்