விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  குலை ஆர்ந்த பழுக் காயும்*  பசுங் காயும் பாளை முத்தும்* 
  தலை ஆர்ந்த இளங் கமுகின்*  தடஞ் சோலைத் திருநறையூர்*
  மலை ஆர்ந்த கோலம் சேர்*  மணி மாடம் மிக மன்னி* 
  நிலை ஆர நின்றான்*  தன் நீள் கழலே அடை நெஞ்சே!         

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

குலை ஆர்த்த பழுக்காயும் – குலைகுலையாக நிறைந்து படுத்த காய்களும்
பசுங்காயும் – பழுக்கப்போகிற காய்களும்
பாளை முத்தும் – பாளைகளிலுண்டான முத்துக்களும்
தலை ஆர்ந்த – தலைகளிலே நிறைந்திருக்கப்பெற்ற
இள கமுகின் – இளைய பாக்குமரங்களையுடைய

விளக்க உரை

திருநறையூர்ச் சோலைகளில் இளைய பாக்குமரங்கள் நிரம்பியுள்ளன; அவற்றின் தலைகளிலே நன்றாகப் பழுத்த காய்களும் பழுக்கப்போகிற காய்களும் பாளை முத்துக்களும் குலைகுலையாகக் குவிந்து கிடக்கின்றன. இப்படிப்பட்ட சோலைவளம் வாய்ந்த திரு நறையூரில் ஒரு மலைபோன்று விளங்காநின்ற மணிமாடக்கோயிலில் ஸ்தாவர ப்ரதிஷ்டையாக நின்றருளு மெம்பெருமானுடைய நீள்கழலே யடைநெஞ்சே!. மலையார்ந்த கொலஞ்சேர் மணிமாடம் = “இரும்பொழில்சூழ் மன்னு மறையோர் திருநறையூர் மாமலைபோல் பொன்னியலுமாடம்” என்றார் பெரிய திருமடலிலும்.

English Translation

O Heart! Ripened fruit and ripening fruit borne in bunches, and Areca fronds spilling pearls of flowers, till the orchards and groves of Tirunaraiyur. The Lord rsides amid jeweled mansions that rise high like mountains, Attain he adorable lotus feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்