விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சுளை கொண்ட பலங்கனிகள்*  தேன் பாய*  கதலிகளின் 
  திளை கொண்ட பழம் கெழுமித்*  திகழ் சோலைத் திருநறையூர்*
  வளை கொண்ட வண்ணத்தன்*  பின் தோன்றல்*  மூவுலகோடு 
  அளை வெண்ணெய் உண்டான் தன்*  அடிஇணையே அடை நெஞ்சே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சுளைகொண்ட – பல சுளைகளை யுடைத்தான
பலங் கனிகள் – பலாப் பழங்களில் நின்றும்
தேன் பாய – தேன் பெருகப்பெற்றும்,
கதலிகளின் – வாழைமரங்களின்
திளைகொண்ட – பருத்திருந்துள்ள

விளக்க உரை

உரை:1

வளைகொண்ட வண்ணத்தன் பன்தோன்றல் பலராமனுடைய திருமேனிநிறம் வெளுப்பாதலால் ‘வளைகொண்ட வண்ணத்தன்’ என்று பலராமனைச்சொன்னபடி. “முன்னலோர் வெள்ளிப்பெருமலைக்குட்டன் மொடுமொடு விரைந்தோடப், பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக்குட்டன்” என்ற பெரியாழ்வாரருளிச்செயலுங் காண்க.

உரை:2

பலாச்சுளைகளிலிருந்து தேன்பாயும், வாழை கனிகள் நெருங்கிவிளங்கும்  திருநறையூர் சோலையில் இருப்பவன்; மூவுலகங்களையும் உண்ட திருமால், சங்கை ஒத்த வெண்ணிறமுடைய பலராமனுக்குத் தம்பியாக தோன்றி, கடைந்த தயிரையும் வெண்ணையையும் உண்டான்.இவன் பாதங்களை நெஞ்சே நீ பற்றுக.

English Translation

O Heart! The slivers of jackfruit drip with honey on trees, while bananas slip out of their peels on fight bunches in plantations of Tirunaraiyur; the Lord who appeared as a younger brother of the conch-hued Balarama took the mil products and the world in one gulp. Attain his feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்