விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தார் ஆர் மலர்க் கமலத்*  தடம் சூழ்ந்த தண் புறவில்* 
  சீர் ஆர் நெடு மறுகின்*  திருவிண்ணகரானைக்* 
  கார் ஆர் புயல் தடக் கைக்*  கலியன் ஒலி மாலை* 
  ஆர் ஆர் இவை வல்லார்*  அவர்க்கு அல்லல் நில்லாவே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தார் ஆர் மலர் - இதழ்மிக்க பூக்களையுடைத்தான
கமலம் தடம் - தாமரைத் தடாகங்களினால்
சூழ்ந்த - சூழப்பட்ட
தண் புறவின் - குளிர்ந்த தோட்டங்களை யுடையதாய்
சீர் ஆர் நெடு மறுகில் - செல்வம் மிக்க நீண்ட வீதிகளையுடையதான

விளக்க உரை

அடிவரவு – துறப்பேன் துறந்தேன் மானேய் சாந்து மற்றோர் மை வேறே முளிந்தீந்த சொல்லாய் தாரார் கண்ணும். திருவிண்ணகர்த்திருப்பதி விஷயமான ஓர் ஆராய்ச்சி:- இத்தலம் உப்பிலியப்பன் ஸண்ணிதியென்று வழங்கப்பட்டு வருகிறது. அதற்கேற்ப இத்தலத் தெம்பெருமானுக்கு நிவேதனமாகும் ப்ரஸாத மொன்னிறலும் அடியொடு உப்பு சேர்ப்பது கிடையாது. உப்பு என்கிற பதார்த்தம் இந்த ஸன்னிதிக்குள் புகவே கூடாதென்று கடுமையான கட்டளை நெடுநாளகவேயுள்ளது. ஸ்தல புராணமும் இதற்கிணங்க அமைந்துள்ளது. ஆனால், ஆழ்வாரருளிச் செயலே நோக்குமிடத்து ‘ஒப்பிலியப்பன்‘ என்பதே எம்பெருமானது திருநாமமென்று விளங்காநின்றது. * தன்னொப்பாரில்லப்பன் தந்தனன் தனதான் நிழலே * என்று திருவாய்மொழியில் (6-3-9) இத்தலத்துட் பதிகத்தில் நம்மாழ்வார் அருளிச் செய்துளர்.

English Translation

This garland of sweet Tamil songs has been sung by generous-as-the-dark-cloud kaliyan for the Lord of Tiruvinnagar surrounded by groves and water tanks with fresh lotus thickets, and laid out with wide streets. Those who master it will have no Karmic accounts.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்