விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சொல்லாய் திரு மார்வா!*  உனக்கு ஆகித் தொண்டு பட்ட 
  நல்லேனை*  வினைகள் நலியாமை*  நம்புநம்பீ*
  மல்லா! குடம் ஆடீ!*  மதுசூதனே*  உலகில் 
  செல்லா நல் இசையாய்!*  திருவிண்ணகரானே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மல்லா - மிடுக்குடையவனே!
குடம் ஆடீ - குடக்கூத்தாடினவனே!
மதுசூதனே - மதுவென்னும் அசுரனைக் கொன்றவனே!
உலகில் செல்லா - லோகத்தில் நடையாடாத (அபூர்வமான)
நல் இசையாய் - நல்ல கீர்த்தியை யுடையவனே!.

விளக்க உரை

அடியேனுடைய குற்றங்களையும் நற்றமாக உபபாதிக்கவல்ல பிராட்டி இணைபிரியாதிருக்கும்போது அடியேனுக்கு என்னகுறை? திருமாலே! மிடுக்குடையவனே! மிடுக்குக்குப் போக்குவீடாகக் குடக்கூத்தாடினவனே! பரிபூரணனே! மதுவைக் கொன்றவனே! கேலாவிலக்ஷணமான புகழையுடைய திருவிண்ணகரப்பனே! சோதிவாய்திறந்து ஒருவார்த்தையருளிச் செய்யவேணும்; தேவரீருக்கே அடிமைப்பட்டிருக்கையாகிற நன்மையையுடைய அடியேனைக் கருமங்கள் நெருக்காதபடி ஆதரித்தருளவேணுமென்கிறார்.

English Translation

O Lord of Tiruvinnagar! O pot-dancer lord! Madhusudana speak to me. O Perfect one whose glory the world will never sing enough! Lord with Sri on chest! Pray ensure the safety and well being of this servant of yours.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்