விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சாந்து ஏந்து மென் முலையார்*  தடந் தோள் புணர் இன்ப வெள்ளத்து 
  ஆழ்ந்தேன்*  அரு நரகத்து அழுந்தும்*  பயன் படைத்தேன்* 
  போந்தேன் புண்ணியனே!*  உன்னை எய்தி என் தீவினைகள் 
  தீர்ந்தேன்*  நின் அடைந்தேன்*  திருவிண்ணகரானே      

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தடம் தோள் - பருத்த தோள்களை
புணர் இன்பம் வெள்ளத்து - அணைவதனாலுண்டாகும் இன்பசாகரத்தில்
ஆழ்ந்தேன் - (கீழ் நாட்களில்) மூழ்கிக்கிடந்தேன்; (அதனால்)
அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன் - கொடிய ஸம்ஸாரநரகத்தில் அழுந்திக்கிடப்பதாகிற பலனைப் பெற்றேன்;
புண்ணியனே - புண்யமே வடிவெடுத்திருக்கும் பிரானே!

விளக்க உரை

கீழ்நாட்களெல்லாம் அநியாயமாய்க் கெட்டுப்போனேன்; பாழாய்ப்போனேன்; சிற்றின்பநுகர்ச்சியிலேயே ஆழ்ந்து நரகத்திலே அழுந்தி நசிக்கப்பார்த்தேன்; தைவாதீனமாய் மீண்டேன், உன் திருவடிகளைச் சேர்ந்து உய்யும்வழி கண்டேன் பிரானே! என்கிறார். விஷயபோகங்களைக் காறியுமிழ்ந்து பகவத்விஷயத்திலே வந்துசேர்ந்த ஆழ்வார் ஹேயமான அவ்விஷயங்களைப் பற்றிச் சாந்தேந்து மென்முலையார் என்றும் தடந்தோள்புணரின்ப வெள்ளமென்றும் விரக்தர்க்கும் காமம் பிறக்கும்படியாக ஏதுக்கு வருணித்துப் பேசுகிறார்? என்று சிலர் பட்டரைக் கேட்டார்களாம்; அதற்கு அவர் அருளிச்செய்ததாவது – உலகத்தில் வாக்குப்படைத்தவர்கள் பல வகைப்படுவர்; சிலர் உள்ளதை உள்ளபடியே பேசுவார்கள்; சிலர் சிறந்த விஷயத்தைப்பற்றிப் பேசத்தொடங்கினாலும் தங்களுடைய வாக்கின் திறமை போராமையினால் குறைபடப் பேசுவார்கள்; சிலர் நாவீறுடைமையினால் அற்பவிஷயங்களையும் கனக்கப் பேசுவார்கள்; இப்படிப் பேச்சில் பல வகைகளுண்டு.

English Translation

O Lord of Tiruvinnagar! I drowned in the pleasure-ocean of mingling with Sandal-pasted soft-breasted long-armed fruid dames and only got the benefit of terrible hell. O Holy one1 I have come to you. Seeking you, i have ended my misery and attained your feet

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்