விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நஞ்சு சோர்வது ஓர் வெம் சின அரவம்*  வெருவி வந்து நின் சரண் என சரண் ஆய்* 
  நெஞ்சில் கொண்டு நின் அம் சிறைப் பறவைக்கு*  அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து*
  வெம் சொலாளர்கள் நமன்தமர் கடியர்*  கொடிய செய்வன உள*  அதற்கு அடியேன் 
  அஞ்சி வந்து நின் அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நஞ்சு சோர்வது - விஷத்தை உமிழ்வதும்
வெம் சினம் - கொடிய கோபத்தையுடையதுமான
ஓர் அரவம் - (சுமுகனென்னும்) ஒரு பாம்பானது
வெருவி - (தன்னைக்கொல்ல விருக்கின்ற கருடனுக்கு) அஞ்சி
வந்து - உன்னிடத்தில் வந்து

விளக்க உரை

ஸுமுகனென்னும் நாககுமாரனை எம்பெருமான் பாதுகாத்தருளியதை முன்னிட்டுக்கொண்டு சரணம் புகுகிறாரிதில். ஸுமுகனக்குக் கருடனால் வந்த அச்சத்தைத் தவிர்த்தருளியதுபோல, அடியேனுக்கு யமபாதை நிமித்தமாக நேர்ந்த அச்சத்தைத் தவிர்த்தருள வேணுமென்கிறார். சரணமடைபவர் தம்தமது தாழ்வுகளை முன்னிட்டுக்கொண்டு சரணம் புகுதல் இயல்பு; அவ்வாறே தமது தீவினைப் பயனாய்வரும் யமதண்டனையைச் சொல்லிக்கொண்டு அடைக்கலமடைகின்றனர். தேவேந்திரனுக்கு நண்பனும் மந்திரியும் ஸாரதியுமான மாதலியானவன் அழகிலும் குணத்திலும் மிகச்சிறந்த தன் புத்திரியான குணகேசியென்னுங் கன்னிகைக்குத் தக்கவரனைத் தேடுபவனாய்ப் புறப்பட்டு வழியில் நாரதமுனிவரைச் சந்தித்துத் துணையாகக்கொண்டு பலவுலகங்களிற் சென்றுபார்த்துத் தக்க வரனைக் காணாமல் பாதாளலோகத்தில் வாஸுகியினாலாளப்படுகின்ற போகவதி யென்னுஞ் சிறந்த நகரத்தையடைந்து அங்கேயிருக்கின்ற அனேக நாககுமாரர்களைப் பார்க்கின்ற பொழுது ஸுமுகனென்னும் நாககுமாரனை நோக்கி அவனது ரூபலாவண்யங்களி லீடுபட்டு அவனுக்குத் தன்மகளைக் கொடுக்கக்கருதி அவனது பாட்டனாரைக்கண்டு பேச, அவர் மகிழ்ச்சியோடு துயரமுங் கொண்டவராய் ‘இவனது தந்தையைக் கருடன் பக்ஷரித்து இந்த ஸுமுகனையும் ஒருமாதத்திற்குள் பக்ஷரிப்பேனென்று சொல்லியிருக்கின்றானாதலால் இவனுக்கு மணஞ்செய்தல் ஏற்றதன்று’ என்று தெரிவித்தார்.

English Translation

In the beautiful fragrant flower-tank, stood an aged elephant with lotus caught in jaws of a crocodile terrible loudly bellowing for help from the Quarters. How you came and you wielded your discus, slicing open the mouth of the tyrant! Ocean-hued Lord, I've come to your lotus feet, O Lord surrounded by groves in Arangam!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்