விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை*  வைகு தாமரை வாங்கிய வேழம்* 
  முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை பற்ற*  மற்று அது நின் சரண் நினைப்ப* 
  கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக்*  கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து*  உன 
  அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கோடிய வாய் விலங்கின் உயிர் மலங்க - கொடுந்தன்மையுள்ள வாயையுடைய முதலையின் பிராணன் சிதையும் படி
கொண்ட - வருவித்துக்கொண்ட
சீற்றம் ஒன்று - ஒரு கோபம்
உண்டு உளது - உண்டாயுள்ளதை
அறிந்து - தெரிந்து கொண்டு (உன் அடியனேனும் வந்து அடி இணை அடந்தேன்.)

விளக்க உரை

கொண்டசீற்றம்’ என்றதனால் எம்பெருமானுக்குக் கோபம் இயற்கைக் குணமல்லாமல் செயற்கையாகக் காரியகாலங்களில் வேண்டுமென்று வருவித்து ஏறிட்டுக் கொண்ட தென்பது தோன்றும். கடல்கடக்க உபாயஞ் சொல்லவேணுமென்று சரணாகதிபண்ணின விடத்தும் விமுகனாயிருந்த கடலரசன் விஷயத்தில் பெருமான் கோபங்கொண்டதைச் சொல்லுமிடத்து “க்ரோகமாஹாரயத்தீவ்ரம்” (கடுங்கோபத்தை வரவழைத்துக்கொண்டார்) என்று வால்மீகி பணித்தது இங்கு ஸ்மரிக்கத்தகும். தனது அடியாரின் எதிரிகள் விஷயமாகப் பெருமான் கொள்ளுங் கோபத்தையே ஆழ்வார் தாம் வாழ்வதற்குச் சாதனமாக ஆபத்தனம் போலக் கருதியமைதோன்ற “கொண்ட சீற்ற மொன்றுண்டுளதறிந்து” என்றார். கஜேந்திராழ்வானைக் காத்தருளும் பொருட்டு மடுவின்கரைதேடி ஓடிவந்தது போல வரவேண்டாமல், நானிருக்கிற இந்த நிலவுலகத்திலே கோயில் கொண்டுள்ளாயென்பார் அணி பொழில் திருவரங்கத்தம்மானே!’ என விளித்தார்.

English Translation

"Son of wind, just a monkey and animal", not addressing the different Hanuman, you Gave your love that was more than the ocean, saying that nothing could repay him for service. May your pure lotus-feet be my refuge, may I too stand by and always enjoy you. Ocean-hued Lord, I've come to your lotus feet, O Lord surrounded by groves in Arangam!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்