விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாதுஇரங்கி*  மற்று அவற்கு இன் அருள் சுரந்து* 
  மாழை மான் மட நோக்கி உன் தோழி*  உம்பி எம்பி என்று ஒழிந்திலை*  உகந்து
  தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து*  அடியேன் மனத்து இருந்திட* 
  ஆழி வண்ண! நின் அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஆழி வண்ண - கடல்வண்ணனே!
அரங்கத்து அம்மானே - அழகிய சோலைகள் சூழ்ந்த திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானே!
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது - (இவன்) அறிவில்லாதவன், கொலைத்தொழில் புரிகின்றவன், நீச ஜாதியிற் பிறந்தவன்’ என்று (குஹனுடைய தாழ்வுகளைக்) கருதாமல்
 
இரங்கி
 
-
 
(அவன் மீது) கிருபை பண்ணி (அவனை உயிர்த்தோழனாக அங்கீகரித்து)

விளக்க உரை

ஸ்ரீ ராமாவதராத்தில் குஹப்பெருமாள் திறத்தில் நீ செய்தருளின திருவருள் என்னெஞ்சை விட்டு அகலாது என்னை உருக்குகின்றது; அப்படிப்பட்ட திருவருள் அடியேன் மேலும் செய்தருளத்தக்கது காண் என்கிறார் இம்முதற்பாட்டில். க்ஷத்ரிய ஜாதியில் ஸூர்யகுலத்தில் இக்ஷ்வாகு வம்சத்தில் திருவவதரித்தவனும் சக்ரவர்த்தியின் திருக்குமாரனும் ஸகலைச்வர்ய ஸம்பந்நனும் மஹாபுத்திமானும் பகைவரிடத்தும் அன்பு கொள்பவனுமான இராமபிரான் குஹனை நோக்குங்கால், இவன் இழிவான வேடச்சாதியனென்றும் அதனால் பகுத்தறிவில்லாத அவிவேகியென்றும்அச்சாதிக்கு இயல்பான கொடுமையினால் எல்லா வுயிர்களோடும் பகைமை கொள்பவனென்றும் இகழ்ச்சி கொள்ளவேண்டியது ப்ராப்தமாயிருந்தும் அங்ஙனம் இகழ்ச்சி கொள்ளாது தனது பெருமைக் குணங்களையும் பாராமல் அவனுடன் கலந்து பரிமாறின கருணையை இங்ஙனம் பாராட்டியெடுத்துக்கூறி, ஆழ்வார், ‘அவ்வாறே அடியேனிடமுள்ள இழிகுணங்களையும் பொருள்செய்யாது என்னையும் ஆட்கொண்டருள்வன் எம்பெருமான்’ என்னும் நம்பிக்கைகொண்டு தாம் அவன் திருவடிகளிற் சரண்புகுந்தமையை வெளியிட்டார்.

English Translation

"Woe-begotten most lowly born servant", -not addressing the boatman Guha thus, Fawn-like tender-eyed Sita beside you, you made your most devoted brother his too, "Come my dear Brother, friend to me always", those words come to my heart and they haunt me Ocean-hued Lord, I've come to your lotus feet, O Lord surrounded by groves in Arangam!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்