விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும்*  பதங்களின் பொருளும்* 
  பிண்டம் ஆய் விரிந்த பிறங்கு ஒளி அனலும்*  பெருகிய புனலொடு நிலனும்*
  கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும்*  ஏழு மா மலைகளும் விசும்பும்* 
  அண்டமும் தான் ஆய் நின்ற எம் பெருமான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பண்டை நால் மறையும் - அநாதியாகவுள்ள நான்கு வேதங்களும்
வேள்வியும் - யாகங்களும்
கேள்வி பதங்களும் - கேட்டறியவேண்டிய வியாகரணமும்
பதங்களின் பொருளும் - அந்தந்த பதங்களினால் அறியப்படுகிற ஜீவஸமஷ்டியும்,
பிண்டம் ஆய் விரிந்த - (காரியப் பொருள்களுக்கெல்லாம் காரணமாய்க்கொண்டு) பிண்டரூபமாயிருந்து பிறகு விரிவுபெற்றவைகளான
பிறங்கு ஒளி அனலும் - மிக்க காந்தியையுடைய அக்நியென்ன

விளக்க உரை

பண்டை நான்மறையும் தானாய் நின்ற வெம்பெருமான், வேள்வியும் தானாய் நின்ற வெம்பெருமான், கேள்விப் பதங்களும் தானாய் நின்ற வெம்பெருமான்… என்றிங்ஙனே யோஜிப்பது. எம்பெருமானே பண்டை நான்மறையாக நிற்கையாவது என்னில்; நான்கு வேதங்களையும் தானே வெளியிட்டவன் என்கையும், நான்கு வேதங்களாலும் பிரதிபாதிக்கப்படுபவன் தானே என்கையுமாம். வேள்வியும் தானாய் நிற்கையாவது – அந்த வேதங்களில் சொல்லப்பட்டுள்ள யாகங்கள் எல்லாவற்றாலும் தானே ஆராதிக்கப்படுபவனாயிருக்கை. வேதங்களில் பலபல தேவதைகள் யஜ்ஞங்களுக்கு விஷயமாகச் சொல்லப்பட்டிருந்தாலும் அந்தந்த தேவதைகளுக்கு அந்தர்யாமியான ஸ்ரீமந்நாராயணனே ஆங்காங்கு விவக்ஷரிதன் என்ற பரமைகாந்தி ஸித்தாந்தம் உணரத்தக்கது.

English Translation

The timeless Vedas, the sacrifices, the Prasnas, the vyakaranas, their meanings, -the cause of all these, the sacred fire-altar, the holy waters of rivers, the Earth, the clouds, the wind, the seven oceans, the seven mountain ranges, the sky, the Universe, -the Lord stands as all these, and as the resident of Arangama – Nagar.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்