விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  துவரித்த உடையவர்க்கும்*  தூய்மை இல்லாச் சமணர்க்கும்* 
  அவர்கட்கு அங்கு அருள் இல்லா*  அருளானை*  தன் அடைந்த
  எமர்கட்கும் அடியேற்கும்*  எம்மாற்கும் எம் அனைக்கும்* 
  அமரர்க்கும் பிரானாரைக்*  கண்டது தென் அரங்கத்தே.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

துவரித்த உடையவர்க்கும் - காவித்துணி கட்டித் திரியும் பௌத்தர்களும்
தூய்மை இல்லா சமணர்க்கும் அவர்கட்கு - பரிசுத்தியற்றவர்களான ஜைநர்களுமான அந்த அவைதிகர்கள் விஷயத்தில்
அருள் இல்லா - அருள் செய்யாதவனும்
அருளானை - (வைதிகர் திறத்தில்) அருள் செய்பவனும்,
தன் அடைந்த - தன்னையே ஆச்ரயித்த

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் எம்பெருமானை ‘அந்தணன் - பரமதயாளு’ என்றார்; வைதிகர்களிடத்தில் தயை உள்ளவனேயன்றி வேதபாஹ்யர்களான புறமதத்தவர்களிடத்தில் தயையுள்ளவனல்லன் என்கிறார் இப்பாட்டில். ‘துவரித்தவுடையவர்’ என்று காஷாயதாரிகளான பௌத்தர்களைச் செல்லுகிறது. ஸ்ரீவைஷ்ணவ ஸந்ந்யாஸிகளுக்கும் காஷாய வஸ்த்ரதாரணம் உண்டேயாகிலும் அவர்களை இங்கு விவக்ஷரிப்பதில்லை; கேவலம் காவித்துணி யுடுத்த மாத்திரத்தினால் வேஷதாரிகளென்று வசைச்சொல் பெற்றவர்களான பௌத்தர்களுக்கே ‘துவரித்தவுடையவர்’ என்று லக்ஷண நாமதேயம் போலும். அப்படிப்பட்டவர்கள் திறத்திலும் தூய்மையற்றவர்களான ஜைநர் திறத்திலும் அருளற்றவன். அதாவது, அவர்களை நிக்ரஹித்து நரகத்திலே வீழ்த்துமவன் என்றவாறு. “கேசவன் தநர் கீழ்மேலெமரேழெழுபிறப்பும் மாசதிரிதுபெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா” என்கிறபடியே தம் பக்கலிலும் தம்மைச்சேர்ந்தவர்கள் பக்கலிலும் எம் பெருமானருள் ஏறிப்பாய்கின்றமையைப் பின்னடிகளில் அருளிச்செய்கிறார். ஆகவிப்படி பாஹ்யரை நிக்ரஹித்து அந்தரங்கரை அநுக்ரஹிக்கும் பெருமானைத் தென்னரங்கத்தில் கண்டேனென்றாராயிற்று.

English Translation

The Lord of grace who has no grace for russet-cloth-Bauddhas and fowl smelling Sramanas, the master of Adiyen, -this lowly self, -the Lord of my father, my relatives, and gods, -I have seen him in Southern Arangam amid cool waters.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்