விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தம் சினத்தைத் தவிர்த்து அடைந்தார்*  தவ நெறியை*  தரியாது 
  கஞ் சனைக் கொன்று*  அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை* 
  வெம் சினத்த கொடுந் தொழிலோன்*  விசை உருவை அசைவித்த* 
  அம் சிறைப் புள் பாகனை*  யான் கண்டது தென் அரங்கத்தே.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தம் சினத்தை தவிர்த்து அடைந்தார் - தங்களுடைய த்வேஷத்தை நீக்கிவிட்டுத் தன்னைவந்து பற்றினவர்களுக்கு
தவம் நெறியை - உபாய மார்க்கமாயிருப்பவனும்,
தரியாது - (தீம்புகளைப்) பொறுத்திருக்க மாட்டாமல்
கஞ்சனை கொன்று - கம்ஸனைக் கொன்றொழித்தவனும்,
அன்று - முன்பொருகாலத்தில்

விளக்க உரை

வெஞ்சினத்த கொடுந்தொழிலோன் விசையுருவை யரைவித்த அஞ்சிறைப் புடபாகனை = ருத்ரன் ஸம்ஹாரத்தொழிற் கடவுளாதலால் “வெஞ்சினத்த கொடுந்தொழிலோன்” என்று அவனைச் சொல்லுகிறது; பாணாஸுர யுத்தத்தில் அவன் பட்டபாடு இங்கு அநுஸந்திக்கத்தக்கது. (ஸ்ரீவிஷ்ணுபுராண ஐந்தாவது அம்சம் முப்பத்துமூன்றாம் அத்யாயம் நோக்குக.) இங்கு “வெஞ்சினத்த கொடுந்தொழிலோன்” என்று (பெயரொன்றும் இன்றியே) பொதுப்படையாயிருத்தலால் பாணாஸுரனென்றும் பொருள் கொள்ளலாமென்பர்

English Translation

The Lord who is attained through the arduous path of given up anger, the Lord who killed Kamsa, the Lord who swallowed and brought fourth the world, the wishing free, the Garuda-rider who put to flight the swift runner Siva of terrible deeds, -I have seen him in Southern Arangam amid cool waters.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்