விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நீர் அழல் ஆய்*  நெடு நிலன் ஆய் நின்றானை*  அன்று அரக்கன் 
  ஊர் அழலால் உண்டானை*  கண்டார் பின் காணாமே*
  பேர் அழல் ஆய் பெரு விசும்பு ஆய்*  பின் மறையோர் மந்திரத்தின்* 
  ஆர் அழலால் உண்டானைக்*  கண்டது தென் அரங்கத்தே.        

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அன்று - ஸ்ரீராமனாய்த் திருவவதரித்த காலத்து
அரக்கன் ஊர் - இராவணனுடைய நகரமான இலங்கையை
கண்டார் பின் காணாமே - முன்பு கண்டவர்கள் பின்பு காணவொண்ணாதபடி
அழலால் உண்டானை - அக்நிக்கு இரையாக்கினவனும்,
பேர் அழல் ஆய் - பெரியபடபாக்னி ஸ்வரூபியும்

விளக்க உரை

நீர் அழல் நிலன் என்று மூன்று பூதங்களைச் சொன்னது – காற்று, விசும்பு என்னும் மற்ற இரண்டு பூதங்களுக்கும் உபலக்ஷணமாகும். பஞ்ச பூதங்களுக்கும் நியாமகன் என்றவாறு. ஸகலசேதநா சேதநங்களையும் எம்பெருமான் சரீரமாகக் கொண்டவனாதலால் இங்ஙனே சொல்லக் குறையில்லையென்க. கண்டார் பின் காணாமே அரக்கனூர் அழலாலுண்டானை – “மன்னு தண்பொழிலும் வாவியும் மதிளும் மாடமாளிகையும் மண்டபமும்” என்று திவ்ய தேசங்களை வருணிப்பதுபோலவே இலங்கையின் ஸந்நிவேசமும் இருந்தது; அப்படிப்பட்ட செல்வமெல்லாம் ஒருநொடிப் பொழுதில் நீறாகி யொழியும்படி தீக்கு இரையாக்கினவனென்கை. பேரழலாய் - கடலில் உறைகின்ற பாடபாக்நி ஸ்வரூபியாயிருப்பவனென்கை. அன்றியே, பகவத்கீதையில் (15-14) சொல்லுகிறபடியே கடித்தும் உறிஞ்சியும் குடித்தும் நக்கியும் நம்மால் உட்கொள்ளப்படுகிற அன்னங்களைப் பசநம் செய்வதற்காக உள்ளே உறைகின்ற ஜாடராக்கியும் எம்பெருமானேயென்று கூறப்படுதலால் அதனைச் சொல்லிற்றாகவுமாம்.

English Translation

The Lord who is manifest as water, fire and the wide sky, -then in the yore, he burnt the city of Landa to dust with his fire spitting arrows, -the Lord who the sacrificial fires attain, the Lord who grants heaven, -I have seen him in Southern Arangam amid cool waters.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்