விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பந்தோடு கழல் மருவாள்*  பைங்கிளியும் பால் ஊட்டாள் பாவை பேணாள்* 
  வந்தானோ திருவரங்கன்*  வாரானோ?' என்று என்றே வளையும் சோரும்*
  சந்தோகன் பௌழியன்* ஐந்தழல்ஓம்பு தைத்திரியன் சாமவேதி* 
  அந்தோ வந்து என் மகளைச் செய்தனகள்*  அம்மனைமீர்! அறிகிலேனே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வளையும் சோரும் - கைவளைகள் கழல நிற்கின்றாள்
சந்தோகன் - சாந்தோக்ய உபநிஷத்தினால் ப்ரதிபாத்யனும்
பௌழியன் - கௌஷீதகீப்ராஹ்மணத்தினால் ப்ரதிபாத்யனும்
ஐந்து அழல் ஓம்பு - பஞ்சாக்நிகளினால் ஆராதிக்கப் படுபவனும்
தைத்திரியன் - தைத்திரிய உபநிஷத்தினால் பிரதிபாதிக்கப் படுபவனும்

விளக்க உரை

பந்தும் கழலும் சிறு பெண்களுக்கு விளையாட்டுக் கருவிகளாயிருப்பன; உறங்கும் போதும் அவற்றைக் கைவிடாதே விரல்களில் இடுக்கிக்கொண்டே உறங்குவது வழக்கம்; நேற்றுவரையில் இவளும் அப்படியேயிருந்தவள் இன்று அவற்றைக் கண்ணெடுத்துப் பார்ப்பதும் தவிர்ந்தாள். எது தவிர்ந்தாலும் தான் வளர்க்கும் கிளிக்குப் பாலூட்டுவது தவிராதிருந்தவள் அக்காரியத்தை அடியோடே மறந்தாள்; கிளிக்குப் பாலூட்டுவது எப்போதோ வொருகாலாசையாலே அதுபோலல்லாமல் ஸர்வகாலமும் பேணிக்கொண்டிருப்பதற்குறுப்பான பாவையுண்டு – பதுமை, அதனைக் கண்ணெடுத்துப் பார்ப்பதும் செய்கின்றிலள். பின்னை இவள் செய்வது என்னென்னில்; ஸர்வகாலமும் திருவரங்கனையே சிந்தைசெய்து கொண்டிருக்கையாலே அந்தப்பாவனை முற்றி அவன் அருகே வந்தானாக நினைத்து ‘வந்தானோ திருவரங்கன்’ என்பது, அவனோடே தழுவி முழுசிப்பரிமாற நினைத்துக்கையை நீட்டினவாறே அவனைக் காணாமையாலே ‘ஓ! நான் பிரமித்தேன் போலும், அவனேது வருகிறதேது? வாரானோ’ என்பதாய் மேனி மெலிந்து வளைகழலப் பெறுகின்றாள். ஸகல வேதப்ரதிபாத்யனாயிருக்குமவன் என் மகளை இப்பாடு படுத்தினான் காண்மின் - என்றாளாயிற்று.

English Translation

No more she plays with her bat and ball, dolls and her pretty parrot, "Srirangam Lord, -is he now coming, not coming ?", bangles falling, "Chandogya-Taitiriya Kousitaki, Fire-altar samaved, O! Vedic lord!", - how can I accept what he did to my daughter frail!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்