விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  'தாது ஆடு வன மாலை தாரானோ?' என்று என்றே தளர்ந்தாள் காண்மின்* 
  யாதானும் ஒன்று உரைக்கில்*  எம் பெருமான் திருவரங்கம்' என்னும்*  பூமேல்-
  மாது ஆளன் குடம் ஆடி மதுசூதன்*  மன்னர்க்கு ஆய் முன்னம் சென்ற- 
  தூதாளன் என் மகளைச் செய்தனகள்*  எங்ஙனம் நான் சொல்லுகேனே? 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

எம்பெருமான் திரு அரங்கம் என்னும் - ‘எம்பெருமான் திருவரங்கம்’ என்கிற வார்த்தையொன்றே சொல்லுகின்றாள்;
பூ மேல் மாது ஆளன் - பூவிற்பிறந்த பிராட்டிக்கு வல்லபனும்
குடம் ஆடி - குடக்கூத்தாடினவனும்
மதுசூதன் - மதுவென்னமசுரனைக் கொன்றவனும்
முன்னம் மன்னர்க்கு ஆய் தூது சென்ற ஆளன் - முன்பொருகால் பஞ்சபாண்டவர்களுக்காக தூது நடந்தவனுமான ஸ்வாமி

விளக்க உரை

என் மகள் ஓச்சலொழிவின்றியே கலகலவென்று எதையேனும் பேசிக்கொண்டிருப்பாளே; அப்படிப்பட்ட இவளுடைய பேச்செல்லாம் ஓய்ந்துவிட்டது; 1. “அவன் மார்வணிந்த வனமாலை வஞ்சியாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே” என்றார்போலே அவ்வளவு வார்த்தையும் செல்லமாட்டாதாளாய் ‘வனமாலை தாரானோ?’ என்கிற இவ்வளவு வார்த்தையே சொல்லிக்கொண்டு தளர்கின்றாள். ‘நங்காய்! இப்படிப்பட்ட தளர்ச்சி உனக்குத் தகார்’ என்று ஹிதமாக நாம் ஏதாவது சொல்லத்தொடங்கினால் நம் வார்த்தை காதில் விழவொண்ணாதபடி காதை மூடிக்கொண்டு ‘திருவரங்கம், பெரிய கோயில்’ என்று கம்பீரமாக மிடற்றோசை செய்கின்றாள்.

English Translation

Waiting for his Tualsi garland with pollen she wilts away, see! Say something to her she only sights, and says, "My Lord in Arangam!" Spouse of the lotus-dame, Pandava's harbinger dancer of pots, Madhusuda, -how can I accept what he did to my daughter frail!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்