விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தாய் வாயில் சொல் கேளாள்*  தன் ஆயத்தோடு அணையாள் தட மென் கொங்கையே
  ஆரச் சாந்து அணியாள் எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்*
  பேய் மாய முலை உண்டு இவ் உலகு உண்ட பெரு வயிற்றன்*  பேசில் நங்காய்* 
  மா மாயன் என் மகளைச் செய்தனகள்*  மங்கைமீர்! மதிக்கிலேனே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இ உலகு உண்ட பெருவயிற்றன்- இவ்வுலகங்களையும் அமுது செய்த பெரிய திருவயிற்றையுடையனான
மா மாயன் - மிகக் ஆச்சர்ய பூதன்
என் மகளை செய்தனகள் - என் பெண்பிள்ளைக்குச் செய்தவற்றை
பேசில் - சொல்லப்புகுந்தால்
மதிக்கிலேன் - அளவிட்டுச் சொல்ல மாட்டுகின்றிலேன்.

விளக்க உரை

நேற்றுவரையில் இவளுடைய போதுபோக்கு ஒருவகையாயிருந்தது; இன்று வேறுபட்டுவிட்டது. என் வார்த்தையில் இவள் வைத்திருந்த மதிப்பு சொல்லிமுடியாது; நான் காலாலே ஏவினதைத் தலையாலே செய்து தீரும்படி அவ்வளவு கௌரவம் என் பேச்சில் வஹித்திருந்த விவள் இன்று என் வார்த்தையைச் செவி தாழ்த்துக் கேட்பதுஞ் செய்கின்றிலள். என்னிலும் மிக்க அன்பு பாராட்டி யிருந்தாள் தோழிமார் பக்கல்; அவர்களைவிட்டு ஒரு நொடிப்பொழுதும் பிரியாதிருந்த விவளக்கு இப்போது ‘தோழிமார்’ என்றால் விஷமாயிராநின்றதே. ஆகவே, தோழிமாரைக்கொண்டு இவளைத்திருத்திக் கொள்வோம் என்று நினைக்கவும் அவகாசமில்லையாயிற்று. ஆயம் - தோழியர்.

English Translation

She does not heed my words nor talks to her girl-friend nor sandals her Risen breast, only asks "Where is my Lord's abode, Tiruvarangam?" Sucker of ogress breast, Swallowed of all the world in a gulp. Wonder Lord, how can I accept what he did to my daughter frail!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்