விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கலை ஆளா அகல் அல்குல்*  கன வளையும் கை ஆளாஎன் செய்கேன் நான்* 
  விலை ஆளா அடியேனை வேண்டுதியோ? வேண்டாயோ?' என்னும்*  மெய்ய
  மலையாளன் வானவர்தம் தலையாளன்*  மராமரம் ஏழ்எய்த வென்றிச் 
  சிலையாளன்*  என் மகளைச் செய்தனகள்*  எங்ஙனம் நான் சிந்திக்கேனே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அகல் அல்குல் கலை ஆளா - அகன்ற நிதம்பமானது வஸ்த்ரத்தை தரிக்கின்றதில்லை;
கை கனம் வளையும் ஆளா - கைகளானவை பொன் வளைகளை ஆள்கின்றனவில்லை;
நான் என் செய்கேன் - (இதற்கு) நான் என்ன பண்ணுவேன்?
அடியேன் - “அடியவளாகிய என்னை

விளக்க உரை

உலகத்திலே ஸாமாந்யனான ஒரு க்ஷுத்ரபுருஷனிடத்தில் காதல் கொண்ட மாதர் அவனுடைய விரஹத்தினால் மேனிமெலிந்து வருந்துவதாகக் காணும்போது ஸாக்ஷாத் புருஷோத்தமனிடத்தில் பெரும் பித்துக்கொண்ட பேரன்பர்க்கு அந்த எம்பெருமானுடைய விரஹத்தில் சரீரம் க்ரசமாயொழியக் கேட்கவேணுமோ? அப்படி சரீரம் மெலிந்தமை கூறுவது முதலடி. உடல் மெலிந்துபோகவே அரையில் வஸ்த்ரமும் கையில்வளைகளும் தங்கமாட்டாமல் கழன்றொழியும் ஆதலால் அதனைச்சொன்ன முகத்தால் மேனிமெலிவு சொல்லிற்றாயிற்று. ஒருபேச்சுப் பேசவும் சக்தியில்லாதபடி மேனி மெலிந்திருக்கச் செய்தேயும் இவளுடைய வாய்ப்பேச்சின் வீறு இருக்கும்படி காண்மின் - ‘விலையாளாவடியேனை வேண்டுதியோ வேண்டாயோ?’ என்கிறாள் எம்பெருமானை முன்னிலைப்படுத்தி. அதாவது –‘என்னை உனக்கே அற்றுத்தீர்த்த அடியவளாக ஆக்கிக்கொள்ள எண்ணமுண்டா இல்லையா? சொல்லிவிடு’ என்று துணிவாகக் கேட்கிறாள்.

English Translation

She has lost her bangles and her golden belt, now what I shall do? "O Buyer, do you or don't you want this slave?", She openly says, Tirumeyyam, Lord of the celestials piercing seven trees in a row, Bow-wielder, how can I accept what he did to my daugher frail!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்