விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வாம் பரி உக மன்னர்தம் உயிர் செக*  ஐவர்கட்கு அரசு அளித்த* 
  காம்பின் ஆர் திரு வேங்கடப் பொருப்ப!*  நின் காதலை அருள் எனக்கு*
  மாம் பொழில் தளிர் கோதிய மடக் குயில்*  வாய்அது துவர்ப்பு எய்த* 
  தீம் பலங்கனித் தேன் அது நுகர்*  திருவெள்ளறை நின்றானே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வாம் பரி - (பாரதப்போர்ச் சேனைகளிலே) மேல்விழுந்து வருகிற குதிரைகள்
உக மன்னர்தம் உயிர் செக - மாளும்படியாகவும் (எதிரிகளான) அரசர்களினுடைய பிராணன் அழியும்படியாகவும் செய்து
ஐவர்கட்கு அரசு அளித்த - பஞ்சபாண்டவர்களுக்கு ராஜ்யத்தை உபகரித்தருளிவனும்,
காம்பின் ஆர் திருவேங்கடம் பொருப்ப - மூங்கில்களாலே நிறைந்த திருவேங்கடமலையில் உள்ளவனமான பெருமானே!

விளக்க உரை

(மாம்பொழில் இத்யாதி.) மாஞ்சோலையிலே போய்ப்புகுந்து அங்குள்ள தளிர்களைத் தின்ற பெண்குயில் வாய் துவர்ப்படைந்து போக, அத்துவர்ப்பை வேறு ரஸத்தாலே மாற்றவேண்டி இனிய பலாப்பழத்திலே சென்று வாய்வைக்கின்றதாம். காவ்ய நாடகாதிகளிலும் பாஹ்யாகமங்களிலும் வாய்வைத்துக் கசத்து வெறுப்புற்றவர்கள் வேதாந்த நூல்களினால் பகவதநுபவம் செய்து களிக்கின்றமை கூறியவாறு.

English Translation

O Lord residing in Tiruvellarai, where cockoos peck on tender Mango leaves then rid the astringency by drinking the nectar of Jackfruit! O Lord of venkatam with Bamboo groves! Then in the yore you killed horses and warrior-kings and gave the kingdom to the five Pandavas. Pray grace me!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்