விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தொண்டர் பரவ*  சுடர் சென்று அணவ* 
  அண்டத்து அமரும்*  அடிகள் ஊர்போல்*
  வண்டல் அலையுள்*  கெண்டை மிளிர* 
  கொண்டல் அதிரும்*  கூடலூரே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தொண்டர் பரவ - ஆச்ரிதர்கள் துதிக்கும்படியாக
சுடர் சென்று அணவ - (திருமேனி) ஸூர்ய மண்டலத்தளவும் போய் ஸ்பர்சிக்க வளர்ந்து
அண்டத்து அமரும் அடிகள் - ஆகாசாவகாசமுள்ள இடமெல்லாம் வியாபித்த ஸ்வாமியினுடைய
ஊர் - திவ்யதேசம்;
வண்டல் அலையுள் - வண்டல் பாய்ந்திருப்பதாய் அலைகளையுடைத்தான நீர்நிலங்களிலே

விளக்க உரை

‘தொண்டர்பால்’ என்றது உலகளக்குங் காலத்தில் ஆங்காங்குள்ள தொண்டர்கள் ஏத்தினபடியைச் சொன்னவாறு. ‘சுடர் சென்றணவ’ என்றது மேலே ஜ்யோதிர்மண்டலத்தளவும் ஓங்கினபடியைச் சொன்னவாறு. ஆகவிப்படி ஓங்கியுலகளந்த வுத்தமன் வாழுமிடம் திருக்கூடலூர். (வண்டலலையுள் இத்யாதி.) வண்டலிட்டிருக்கும் நீர்நிலங்களிலே கெண்டை மீன்கள் செருக்காலே துள்ளும்போது அவற்றின் உடல் மின்னல் மின்னினாற்போலேயிருக்கும் ; அதனைக்கண்ட மேகங்கள் தம்மிடத்து மின்னுகின்ற மின்னலின் ஒளியே யென்று நினைத்து மின்னலுக்கு அடுத்தபடியாக வுண்டாகவேண்டிய கர்ஜனையைச் செய்கின்றனவாம்.

English Translation

The Lord worshipped by devotees, is manifest everywhere upto the sky, touching the sun. He resides in kulalur where kendai-fish sparkle and dance seeing which the clouds mistake them for lightning and begin to roar!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்