விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கூற்று ஏர் உருவின்*  குறள் ஆய்*  நிலம் நீர்
  ஏற்றான் எந்தை*  பெருமான் ஊர்போல்*
  சேற்று ஏர் உழவர்*  கோதைப் போது ஊண்*
  கோல் தேன் முரலும்*  கூடலூரே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

குறள் ஆய் - வாமநமூர்த்தியாகி
நிலம் நீரேற்றான் - பூமிதானம் வாங்கிக்கொண்ட
எந்தை பெருமான் ஊர் - எம்பெருமானுடைய திவ்யதேசம்;-
சேறு - சேறுகளிலே
ஏர் உழவர் - ஏர்கட்டி உழுகின்றவர்களது

விளக்க உரை

‘இப்படியும் விலக்ஷணமானதொரு வாமநவேஷம் உலகிலுண்டோ’ என்று கண்டாரடங்கலுங் கொண்டாடத் தகுந்த வாமந மூர்த்தியாய் மாவலிபக்கலிற் சென்று பூமிதாநம் வாங்கின பெருமான் வாழுமிடம் திருக்கூடலூர். (சேற்றேழுவர் இத்யாதி.) அவ்விடத்து ஏர்பிடித்து உழுகின்றவர்களும் முடியிற் பூவணிந்திருப்பர்களென்று காட்டியவாறு. க்ஷேத்ர வைபவங்களில் இதுவுமொன்றாம். “கோதைப்போதுண்” என்ற பாடத்தில், உண் - உண்கிற’ என்று பொருளாம். ‘போதூண்’ என்றபாடத்தில், ஊண் முதனிலை திரிந்து தொழிற்பெயர். கோல் தேன் - மரக்கொம்புகளிலே தட்டித்திரியும் வண்டுகள் என்கை. இவை தமக்கு வாய்த்த இடங்களை விட்டிட்டு, சேற்றேருழுவர்களது தலைப்பூக்களிலே மதுவில் நசையாலே திரிகின்றனவாம்

English Translation

My Lord and Master came as a beautiful lad and took the Earth and oil. He resides in Kudalur where bees take nectar from the coiffure of the dames filling the land.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்