விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பிள்ளை உருவாய்த்*  தயிர் உண்டு*  அடியேன்
  உள்ளம் புகுந்த*  ஒருவர் ஊர்போல்*
  கள்ள நாரை*  வயலுள்*  கயல்மீன்
  கொள்ளை கொள்ளும்*  கூடலூரே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பிள்ளை உரு ஆய் - (கண்ணனாகிற) சிறுபிள்ளை யாயிருந்துகொண்டு
தயிர் உண்டு - தயிரை அமுதுசெய்தவனும்
அடியேன் - அடியேனுடைய
உள்ளம் - ஹ்ருதயத்திலே
புகுந்த - புகந்தவனுமான

விளக்க உரை

ஸர்வேச்வரனாயிருந்துகொண்டு தயிருண்ணப் பார்த்தால் அவ்விருப்பம் நிறைவேறாதென்று அதற்காகப் பிள்ளை வடிவுகொண்டு தயிரமுது செய்து, இப்படி ஆச்ரிதருடைய ஹஸ்தஸ்பர்சம் பெற்ற த்வவ்யத்தாலன்றி வேறொன்றாலும் செல்லாத நீர்மையைக் காட்டி என்னெஞ்சை வசப்படுத்திக்கொண்ட விலக்ஷணபுருஷன் விரும்பியுறையுமிடம் திருக்கூடலூர். (கள்ளநாரை யித்யாதி.) நாரைகள் நீர்நிலைகளிற் சென்று உட்கார்ந்திருக்கும்; அவற்றின் காலிலே சிறுமீன்கள் வந்து குத்தும்; குத்தினாலும் “உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாங் கொக்கு” என்றாப்போலே அவற்றை அநாதரித்திருந்து தாம் விரும்பி உட்கொள்ளும் பெருமீன்கள் வந்து கிட்டினவாறே மேல்விழுந்து கொள்ளைகொள்ளும்.

English Translation

The Lord who, coming as a child, ate curds and stole my heart, resides in kudalur where sly herons steal kayal fish from the fields.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்