விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  செறும் திண்*  திமில் ஏறு உடைய*  பின்னை 
  பெறும் தண் கோலம்*  பெற்றார் ஊர்போல்*
  நறும் தண் தீம்*  தேன் உண்ட வண்டு* 
  குறிஞ்சி பாடும்*  கூடலூரே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

செறும் திண்திமில் ஏறு - மேல் விழுவனவாய் திடமான முசுப்புக்களையுடையனவான ரிஷபங்கள்
உடைய - பங்கமடைய,
பின்னை பெறு தண் கோலம் - நப்பின்னைப் பிராட்டியினுடைய பெறுதற்கு விரும்பத்தகுந்ததான அழகிய திருமேனியை
பெற்றார் - (ஏறுதழுவி) மணஞ் செய்து கொண்ட பெருமானுடைய
ஊர் - திவ்யதேசம் (எதுவென்றால்)

விளக்க உரை

ஏறு உடைய பின்னை = ரிஷபங்களை யுடையளான நப்பின்னை என்றதாகக் கொண்டு, ரிஷபங்களின் வலியடக்குதலைத் தனக்கு சுல்கமாகவுடைய நப்பின்னை என்னவுமாம். கோலம் - அழகுக்கும் உடம்புக்கும் பெயர். மூன்றாமடியில் ‘தண்டீன்’ என்று பலரும் ஓதுவது பொருந்தாது. ‘தண்டீம்’ என்றே ஓதுக. தண் + தீம், தண்டீம். தீம் - இனிமை

English Translation

Krishna received the beautiful Nappinnal as a prize for his subduring the seven bulls in a fight, He resides in Kudalur where bees drink fragrant nectar and sing kurinji panns.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்