விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மின்னின் அன்ன நுண் மருங்குல்*  வேய் ஏய் தடந் தோள் மெல்லியற்கா* 
  மன்னு சினத்த மழ விடைகள்*  ஏழ் அன்று அடர்த்த மாலது இடம்*
  மன்னும் முது நீர் அரவிந்த மலர்மேல்*  வரி வண்டு இசை பாட* 
  புன்னை பொன் ஏய் தாது உதிர்க்கும்* புள்ளம்பூதங்குடிதானே.     

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மின்னின் அன்ன நுண் மருங்குல் - மின்னலோடு ஒத்த நுட்பமான இடையை யுடையவளும்
வேய் ஏய் தட தோள் - மூங்கில் போன்று பருத்த தோள்களை யுடையவளுமான
மெல்லியற்கா - இளம்பெண்ணாகிய நப்பின்னைப் பிராட்டிக்காக
அன்று - முன்பொரு காலத்தில்
மன்னு சினந்த ஏழ் மழ விடைகள் - மாறாத கோபத்தையுடைய ஏழு இளங்காளைகளை

விளக்க உரை

முதலடியின் வியக்கியானத்திலே “கருமாரி பாய்ந்தும் அணைய வேண்டுமாய்த்து (நப்பின்னைப் பிராட்டியின்) வடிவழகு” என்று பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸூக்தியுள்ளது: கருமாரி பாய்தலென்பது, கச்சிமாநகரில் காமாட்சியம்மன் ஆலயத்தில் குளத்திலே நாட்டப்பட்டிருந்த மிகக் கூர்மையான இரண்டு சூலங்களினிடையே குதித்தலாம். பண்டைக்காலத்தில் ஏதேனும் இஷ்டஸித்திபெற வேண்டுவார் இவ்வருந்தொழில் செய்வது வழக்கமாம்: குடல் கிழிந்து சாகவேண்டும்படியான இவ்வருந்தொழிலை வெகு சாதுரியமாகச் செய்து அயாபமொன்றுமின்றியே உயிர் தப்பி இஷ்டஸித்தி பெறுமவர்கள் மிகச்சிலரேயாவர். மிகக்கடினமான இக்காரியத்திற்குத் துணிந்தார்கள் என்றால் இதனால் அவர்கள் பெற விரும்பிய வஸ்து மிகச் சிறந்ததென்பது விளங்குமன்றோ. அப்படியே, நப்பின்னை திருமேனியின் சிறப்பை விளக்கவந்தது இவ்வாக்கியமென்க. கருமாறி யென்றும் சொல்லுவர்; கர்ப்பத்தைக் கிழிப்பதென்றபடி.

English Translation

For the pleasure of embracing the Bamboo-like arms of the lightning-thin-waisted Nappinnai, the adorable Lord subdued seven angry young bulls. He resides,-where lotus blossoms in eternally wet water tanks, on which gold-lined dark bumble bees drink nectar and sing, while punnai trees sprinkle golden turmeric-like pollen, -in Pullam-Budangudi, yes always!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்