விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கள்ளக் குறள் ஆய் மாவலியை வஞ்சித்து*  உலகம் கைப்படுத்து* 
  பொள்ளைக் கரத்த போதகத்தின்*  துன்பம் தவிர்த்த புனிதன் இடம்*
  பள்ளச் செறுவில் கயல் உகள*  பழனக் கழனி-அதனுள் போய* 
  புள்ளு பிள்ளைக்கு இரை தேடும்*  புள்ளம்பூதங்குடி தானே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கள்ளம் குறள் ஆய் மாவலியை வஞ்சித்து - கபடமுள்ள வாமந ரூபியாகி மஹாபலியை ஏமாற்றி
உலகம் கைப்படுத்து - ஸகலலோகங்களையும் ஸ்வாதீனப்படுத்திக் கொண்டவனும்
பொள்ளை கரத்த போதகத்தின் - துளைக்கையை யுடைய கஜேந்திரனது
துன்பம் தவிர்த்த - துயரத்தைப் போக்கியருளின
புனிதன் - பரம பவித்திரனுமான பெருமான் எழுந்தருளியிருக்கின்ற

விளக்க உரை

இத்தலத்தின் வயல்வளங் கூறுவன பின்னடிகள். முற்காலத்தில் ஆலவாயுடையான் என்பானொரு தமிழன் பட்டரிடம் வந்து இப்பாட்டில் ஒருகேள்வி கேட்டான்;- ‘பள்ளச் செறுவில் கயலுகள” என்றபோதே அவ்விடத்து வயல்களில் மீன்கள் அளவற்றுக் கிடக்கின்றமை வெறிவந்து விட்டது; அப்படியிருக்க, ஈற்றடியில் “புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடும்” என்று எங்ஙனே சொல்லலாம்? மீன் அருமைப்பட்டிருந்தாலன்றோ இரை தேடவேண்டும்; கொள்வார் தேட்டமாம்படி குறையற்றுக் கிடக்கும்போது தேடிப்பிடிப்பதாகச் சொல்லுவது பொருந்தாதன்றோ? என்று கேட்டான்; இதற்குப் பட்டர் அருளிச் செய்ததாவது – பிள்ளாய்! நீ கற்றவனாயினும் சொற்போக்கு அறிந்திலை; “பிள்ளைக்கு இரை தேடும்” என்றுள்ளது காண்; அங்குள்ள மீன்கள் நிலமிதியாலே தூணும் துலாமும்போலே தடித்திருக்கும்; அவை பறவைக் குட்டிகளின் வாய்க்குப் பிடிக்கமாட்டாவாகையால் உரிய சிறிய மீன்கள் தேடிப்பிடிக்க வேண்டு மத்தனை யன்றோ? என்றாராம்.

English Translation

Like a sly trickster He came swooping over Mabali and took the worlds; He went to the wailing elephant and ended his despair, He resides amid water tanks and wetland fields-where birds swoop down upon jumping fish and snatch them, then fly to their wailing chicks to feed them, -in Pullam-Budangudi, yes, always!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்