விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அறிவது அறியான் அனைத்து உலகும் உடையான்*  என்னை ஆள் உடையான்*
  குறிய மாணி உரு ஆய*  கூத்தன் மன்னி அமரும் இடம்*
  நறிய மலர்மேல் சுரும்பு ஆர்க்க*  எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட* 
  பொறி கொள் சிறை வண்டு இசை பாடும்*  புள்ளம்பூதங்குடி தானே.(2)    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அறிவது அரியான் - (ஒருவர்க்கும் தம் முயற்சியாலே) அறியக் கூடாதவனும்
அனைத்து உலகும் உடையான் - எல்லாவுலகங்கட்கும் ஸ்வாமியானவனும்
என்னை ஆள் உடையான் - அடியேனை அடிமை கொண்டவனும்
குறிய மாணி உரு ஆய - வாமநப்ரஹ்மசாரி வேஷங்கொண்டவனும்
கூத்தன் (அவ்வேஷத்தோடு மாவலி வேள்வியில் எழுந்தருளும் போது) - விலக்ஷணமான நடையிட்டு எழுந்தருளினவனுமான பெருமான்

விளக்க உரை

அறிவதரியான் = அறிய முடியாதவன் என்றால், ‘ஒருவராலும் அறிய முடியாதவன்’ என்று பொருளா? அன்றி, ‘சிலரால் அறிய முடியாதவன்? என்று பொருளா?’ என்று கேள்வி பிறக்கும்; ஒருவராலும் அறிய முடியாதவன் என்றால் முயற்கொம்பு, மலடிமகன், ஆகாசத்தாமரை முதலிய பொருள்கள் போல எம்பெருமானும் அடியோடு இல்லாதவன் என்றதாரும் : ஆகையாலே அது பொருளன்று; ‘பகவத் ஸ்வரூபத்தை நாமே முயன்று அறிந்திடுவோம் என்று முயல்பவர்களால் அறியக் கூடாதவன் என்று பொருள் கொள்க. அவன் தானே தன் இன்னருளாலே தன் ஸ்வரூபஸ்வபாவங்களைக் காட்டிக்கொடுக்க அப்போது அறியலாகுமேயன்றி வேறுவிதமாக அறியலாகாதென்கை. “திவ்யம் ததாமி தே சக்ஷ{: பச்யமேயோகமைச்வரம்” என்று அர்ஜுநனுக்குக் காட்டிக் கொடுத்தாற் போலக் காட்டிக் கொடுக்கில் காணவழியுண்டு.

English Translation

The-hard-to-comprehened Lord, bearer of all the worlds, who keeps me in this service, came as a little manikin and, danced over the worlds; he resides permanently, -amid groves where; little bees provide the drone for the bumble-bees that sing for the dance of the handsome peacocks,-in Pullam-Budangudi, yes, always!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்