விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  முடி உடை அமரர்க்கு இடர் செய்யும்*  அசுரர் தம் பெருமானை*  அன்று அரி ஆய் 
  மடியிடை வைத்து மார்வம் முன் கீண்ட* மாயனார் மன்னிய கோயில்*
  படியிடை மாடத்து அடியிடைத் தூணில்*  பதித்த பல் மணிகளின் ஒளியால்* 
  விடி பகல் இரவு என்று அறிவு அரிது ஆய*  திருவெள்ளியங்குடி அதுவே.    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

முடி உடை அமரர்க்கு - கிரீடம் பூண்டிருக்கிற தேவர்களுக்கு
இடர் செய்யும் - துன்பங்களைச் செய்து கொண்டிருந்த
அசுரர்தம் பெருமானை - இரணியாசுரனை
முன் அன்று - முற்காலத்தில்
அரி ஆய் மடியிடை வைத்து மார்வைகீண்ட - நரசிங்கமாகி மடிமேல் வைத்துக்கொண்டு மார்பைக் கிழித்து முடித்தவனான

விளக்க உரை

இத்தலத்தில் திருமாளிகைகள் எல்லாம் நவமணிகள் அழுத்தப் பெற்றிருத்தலால் அவற்றின் ஒளி இடைவிடாது விளங்காநின்றமையால் ‘இப்போது பகல், இப்போது இரவு’ என்று அறியக் கூடவில்லையென்பன பின்னடிகள். இங்ஙனே வருணித்தல் பொய்யுரையாகா தோவென்று சிலர் சங்கிப்பர்; இத்தலம் இப்படிப்பட்ட அதிசயம் வாய்ந்ததாக அமைய வேணும் என்னுமாவல் ஆழ்வார்க்கு உள்ளதாதலால் அதுதோன்ற இங்ஙனே அருளிச் செய்யப்பட்டதென்க. ஆதராதிசயத்தினால் சிறப்பித்துக் கூறுதல் தகும்.

English Translation

The wonder-Lord who came as a man-lion to destroy the king of Asuras who gave misery to the gods, placed him on his lap and fore his chest, resides in the temple, -surrounded by mansions and pillars set with gems that make it difficult to say whether it is night or day, -of Tiruvelliyangudi, that is it!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்