விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நும்மைத் தொழுதோம்*  நும்தம் பணிசெய்து இருக்கும் நும் அடியோம்* 
  இம்மைக்கு இன்பம் பெற்றோம்*  எந்தாய் இந்தளூரீரே* 
  எம்மைக் கடிதாக் கருமம் அருளி*  ஆவா! என்று இரங்கி* 
  நம்மை ஒருகால் காட்டி நடந்தால்*  நாங்கள் உய்யோமே?       

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இந்தளூரிர் - திருவிந்தளூரில் எழுந்தருளியிருக்கிற
எந்தாய் - ஸ்வாமியே!.
நும்மை தொழுதோம் - தேவரீரை ஆச்ரயித்தோம்;
நும் தம் பணி செய்து இருக்கும்  நும் அடியோம் - உமக்குக் கைங்கரியம் செய்தே ஸத்தை பெற்கூடிய அடியவர்களா யிருக்கின்றோம்-;
இம்மைக்கு - இப்பிறவியிலே

விளக்க உரை

பெருவிடாய்ப்பட்டவன் ஒருகால் நாக்கு நனைக்கத் துளிதீர்த்தம் கிடைத்தால்போதும் என்பதுபோல இவ்வாழ்வார் திருவிந்தளூர்ப் பெருமானுடைய வடிவழகை ஒருகால் காணப்பெற்றால் போதுமென்கிறார். ஒருகால் கண்டமாத்திரத்தில் தமக்குப் பூரணத்ருப்தி பிறந்தவிடும் என்று பொருளான்று; கண்ணில் சிறிது காணப்பெறுவோமாகில் பிறகு வளைத்துக்கொள்ளலாம் என்ற கருத்தாம். ஈற்றடியில் நம்மை என்றது தேவரீரை என்ற பொருளில் வந்தது. “நம்ம வீட்டில் குழந்தைகள் க்ஷேமமா?” என்கிற உலகவழக்கம் நோக்குக. தன்மையில் முன்னிலையும் முன்னிலையில் தன்மையும் வியவஹாரிப்பதுண்டு. ஒருகால் நம்மைக்காட்டி என்னைக் காணும்படியாகச்செய்து (எனக்கு ஸேவை ஸாதித்து) என்று உரைக்கலாமாயினும் அது சுவைக்கேடு. ‘காட்டினால்’ என்னாமல் “காட்டி நடந்தால்” என்றதனால் புறப்பாடு ஸேவிக்கையிலே காதல் கொண்டவர்போலும்.

English Translation

O Lord of indalur! We worship you; We are your devotees, at the service of your lotus feet. We are happy and well, if only you would wake up to our needs quickly and inquire of us with concern, if only you would reveal yourself and walk a few steps before us, would we not find elevation of spirit?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்