விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நாடி என்தன் உள்ளம் கொண்ட*  நாதன் என்றும்*  நான்மறைகள்-
  தேடி என்றும் காண மாட்டாச்*  செல்வன் என்றும்*
  சிறை கொள் வண்டு சேடு உலவு பொழில் கொள் நாங்கைத்*  தேவதேவன் என்று என்று ஓதி* 
  பாடகம் சேர் மெல்அடியாள்*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பாடகம் சேர் மெல் அடியாள் - பாதச்சிலம்பு அணிந்த மிருதுவான அடிகளையுடைய என் பெண்ணானவள்
நாடி என்தன் உள்ளம் கொண்டநாதன் என்றும் - தேடி வந்து என் மனதை இருப்பிடமாக் கொண்ட ஸ்வாமியென்றும்,
நால் மறைகள் தேடி என்றும் காணமாட்டா - நான்கு வேதங்கள் ஆராய்ந்து பார்த்து ஒருநாளும் காண முடியாத செல்வன் என்றும் - ஸ்ரீமான் எனறும்,
சிறை கொள் வண்டுசேடு உலவுபொழில் கொள் நாங்கை - சிறகுளையுடைய வண்டுகள் திரள்திரளாக உலாவப்பெற்ற சோலைகளை யுடைத்தான திருநாங்கூரில் எழுந்தருளியிருக்கிற

விளக்க உரை

“பாதகடகம்” என்னும் வடசொல் பாடகம் எனச் சிதைந்தது; காலணிக்குப் பெயர்

English Translation

"He did seek and find me, then he took my heart and made me a slave!", "Vedas try to reach him through their sacred chants and yet they never!", "Bees abound in groves a Nangai, _Deva-deva Lord resides!", My anklet-wearing tender-footed daughter sings of Parttan-Palli, O!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்