விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த*  நாதன் என்றும் நானிலம் சூழ்* 
  வேலை அன்ன கோல மேனி*  வண்ணன் என்றும்*
  மேல் எழுந்து சேல் உகளும் வயல் கொள் நாங்கைத்*  தேவ தேவன் என்று என்று ஓதி* 
  பாலின் நல்ல மென் மொழியாள்*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.            

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த நாதன் என்றும் - உலகம் முழுவதையும் (பிரளத்தில்) திருவயிற்றிலடக்கி (ப் பிறகு) வெளிப்படுத்திய ஸ்வாமி என்றும்,
நானிலம் சூழ் வேலை அன்ன - பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கிற கடல்போன்ற
கோலம் மேனி வண்ணன் என்றும் - அழகியதான திருமேனி நிறமுடையவ னென்றும்,
சேல் மேல் எழுத்து உகளும் வயல் கொள் நாங்கை - மீன்கள் மேலே எழும்பித் துள்ளாநிற்கப்பெற்ற கழனிகளையுடைய திருநாங்கூரில் எழுந்தருளியிருக்கிற

விளக்க உரை

English Translation

"Lord who swallowed all the worlds and brought them out in time again!" "Lord of dark adorable hue, like the ocean, -deep in a sleep!" "Dancing, set-fish fields in Nangai, "Deva-deva's paradise!", speech-of-milk-and-nectar sweet, my daughter sings of Parttan-Palli O!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்