விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அண்டர் கோன் என் ஆனை என்றும்*  ஆயர் மாதர் கொங்கை புல்கு 
  செண்டன் என்றும்*  நான்மறைகள் தேடி ஓடும் செல்வன் என்றும்*
  வண்டு உலாவு பொழில் கொள் நாங்கை*  மன்னும் மாயன் என்று என்று ஓதி* 
  பண்டுபோல் அன்று என் மடந்தை*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.      

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

என் மடந்தை பண்டு போல் அன்று - என் பெண்ணானவள் (இப்போது) முன்போலல்ல; (என்ன செய்கின்றாளென்னில்;)
அண்டர் கோன் (என்றும்) - பிரமாண்டத்திலுள்ளா ரெல்லார்க்கும் ஸ்வாமியென்று சொல்லிக்கொண்டும்
என் ஆனை என்றும் - எனக்கு ஆனை போன்றவன் என்று சொல்லிக்கொண்டும்
ஆயர் மாதர் கொங்கை புல்கு செண்டன் எனறும் - இடைப்பெண்களுடைய முலைகளோடே அணையும் இயல்வுடையவனென்று சொல்லிக்கொண்டும்

விளக்க உரை

‘அன்டர்’ என்று தேவர்களுக்கும் இடையர்க்கும் பெயர். அண்டத்துக்குட்பட்டா ரெல்லாரையுஞ் சொல்லும். இரட்டுற மொழிதலால் - இடையர்கட்குத்தலைவன், தேவர் கட்குத்தலைவன் என்ற இரண்டு பொருளையுங்கொண்டு, ஸௌலப்யத்திலும் பரத்வத்திலும் எல்லை காணமுடியாதவன் என்பதாகக் கொள்ளலாம். ஆயர் மாதர் கொங்கைபுல்கு செண்டன் - அவனிடத்தில் நான் இவ்வளவு காதல் கொண்டிருக்கச் செய்தேயும் இடைச்சிகளோடு புணருவதிலேயே அவனுக்கு நோக்கமென்று பிரணய ரோஷந்தோற்றச் சொல்லுகின்றாளென்க. ‘செண்டு’ என்று ஸ்வபரவத்துக்கும்பெயர். நான்மறைகள் தேடியோடுஞ் செல்வன் - வேதங்களெல்லாம் அவனுடைய பெருமைகளை எல்லை கண்டு சொல்லி முடித்துவிடவேணுமென்று முயன்றும் “யதோவாசோ நிவர்த்தந்தே, அப்ராப்யமநஸா ஸஹ” என்கிறபடியே அவனைப் பின்தொடர்ந்தோடி இளைத்து மீள்வனவாதலால் அவற்றுக்குப் பிடிகொடாமல் அபரிச்சிந்ந் வைபவனாயிருப்பவன்.

English Translation

"Lord of Earth, adorable, the elephant-bull among the dames!" "Lord who runs amuck to hear the chanting of the Vedas four!" "Bees in groves abound in Nangai, -ancient place of worship, his!" She's now no more like the old, my daughter sings of Parttan-Palli, O!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்