விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பூவார் திருமாமகள்*  புல்கிய மார்பா!* 
  நாவார் புகழ்*  வேதியர் மன்னிய நாங்கூர்த்*
  தேவா!*  திருவெள்ளக்குளத்து உறைவானே* 
  'ஆவா!  அடியான்*  இவன் என்று அருளாயே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பூ ஆர் - தாமரைப் பூவில் பொருந்திவஹிக்கிற
திரு மா மகள் - பெரிய பிராட்டியார்
புல்கிய - புணர்ந்த
மார்பா - திருமார்பை யுடையவனே!,
நா ஆர் புகழ் - (உலகத்தாருடைய) நாக்கிலே நிறைந்திருக்கிற கீர்த்தியையுடைய

விளக்க உரை

திருவேங்கடமலைக்குத் திருப்பதிகம் பாடின நம்மாழ்வார் “அகலகில்லேனிறையுமென்று அலர்மேல்மங்கை யுறைமார்பா!” என்று பிராட்டியின் நித்யஸம்பந்தத்தையிட்டுப் பாசுரம் கேசினதுபோலவே, அத்திருமலைக்குத் தோள்திண்டியான திருவெள்ளககுளத்துக்குத் திருப்பதிகம் பாடுகிற இவ்வாழ்வாரும் “பூவார் திருமாமகள் புல்கிய மார்பா!” என்று பிராட்டியின் நித்யஸம்பந்தத்தையிட்டு இப்பாசுரும் பேசுகிறாரென்க. பிராட்டியானவள் உன்னை விட்டுப் பிரியாதிருக்கவும் நான் இழப்பது என்னோ? என்ற கருத்தையடக்கிப் ‘பூவார் திருமாமகள் புல்கிய மார்பா!’ என விளிக்கின்றார்.

English Translation

O Lord who enjoy the embrace of Lotus Dame. Residing in Nangur, Glory to Vedic seers! Lord of celestials, -Tiruvellakulam Lord! Say, "Oh, Oh, this is my servant!", grace me thus.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்