விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வேடு ஆர்*  திருவேங்கடம் மேய விளக்கே* 
  நாடு ஆர் புகழ்*  வேதியர் மன்னிய நாங்கூர்ச்*
  சேடு ஆர் பொழில் சூழ்*  திருவெள்ளக்குளத்தாய்* 
  பாடாவருவேன்*  வினை ஆயின பாற்றே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வேடு ஆர் திருவேங்கடம் மேய - வேடர்கள் மலிந்திருக்கிற திருமலையிலே நித்யவாஸம் பண்ணுகிற
விளக்கே - விளக்குப்போன்றவனே!
நாடு ஆர் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர் - நாடெங்கும் நிறைந்த புகழையுடையரான வைதிகர்கள் நித்யவாஸம் பண்ணுகிற திருநாங்கூரில்,
சேடு ஆர் பொழில் சூழ் - திரண்டிருக்கின்ற சோலைகளால் சூழப்பட்ட
திருவெள்ளக் குளத்தாய் - திருவெள்ளக்குளத்தில் எழுந்தருளியிருப்பவனே!,

விளக்க உரை

வடநாட்டுத் திருப்பதிகளில் வேங்கடமலைக்கு எவ்வளவு சிறப்பு உண்டோ அவ்வளவு சிறப்பு சோழநாட்டுத் திருப்பதிகளில் இத்திருவெள்ளக் குளத்திற்கு உண்டென்பது ப்ரஸித்தம். அங்கும் இங்கும் பிரார்த்தனைகள் விசேஷமாகச் செலுத்தப்பெறும். இவ்வொற்றுமைநயம் விளங்கவே “வேடார் திருவேங்கடம் மேயவிளக்கே!” என அபேதமாக விளிக்கின்றார். கீழ் முதற்பத்தில் திருவேங்கடமலை விஷயமான திருமொழிகளில் “கண்ணார் கடல் சூழ” என்பது ஒரு திருமொழி; அதன் சாயையாகவே இத்திருமொழியும் அருளிச்செய்யப்படுகிறது. இரண்டு திருமொழிகளின் தொடக்கமும் ஒருவிதமாகவேயிருக்கும்படி அமையவைத்ததும் உய்த்துணரத்தக்கது.

English Translation

O Lord who shines a beacon on venkatam, Residing in Nangur praised by the noble seers, in blossoming groves, -Tiruvellakulam Lord! I came to sing of you, rid me of msiery.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்