- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
மாவளம் பெருகி மன்னும்* மறையவர் வாழும்* நாங்கைக்
காவளம் பாடிமேய* கண்ணனைக் கலியன் சொன்ன*
பாவளம் பத்தும் வல்லார்* பார்மிசை அரசர் ஆகிக்*
கோ இள மன்னர் தாழக்* குடைநிழல் பொலிவர்தாமே.
காணொளி
பதவுரை
கலியன் சொன்ன - திருமங்கையாழ்வாரருளிச் செய்த
வளம் பா பத்தும் வல்லார் தாம் - அழகுபொருந்திய இப்பாசுரங்கள் பத்தையும் ஓதவல்லவர்கள்
பார் மிசை அரசர் ஆகி - பூமியிலே, அரசர்களாயிருந்து கொண்டு
கோ இள மனனர் தாழ - (மற்றுள்ள) ராஜாக்களும் இளவரசர்களும் வணங்குமாறு
குடை நிழல் பொலிவர் - ஒற்றைக்குடை நிழலில் விளங்கப்பெறுவர்
விளக்க உரை
பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி வருமாறு:- “மோக்ஷத்தைப் மாகச் சொல்லில் அதிகாரிகளைக் கிடையாதென்று, அபிமதஸாதன மென்னவே கற்பர்கள்; பின்னை மோக்ஷத்திலே கொடுபோய் மூட்டுகிறோமென்று ஐச்வர்யத்தைப் பலமாகச் சொல்லிற்று.” என்று.
English Translation
This garland of songs on Krishna, resident of Kavalampadi, rich with the learning of Vedic seers, is offering made by kaliyan. Those who master it will be parasoled rulers of the Earth. Worshipped by vassal kings.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்