விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மூத்தவற்கு அரசு வேண்டி*  முன்பு தூது எழுந்தருளி* 
  மாத்தமர் பாகன் வீழ*  மத கரி மருப்பு ஒசித்தாய்*
  பூத்தமர் சோலை ஓங்கி*  புனல் பரந்து ஒழுகும் நாங்கைக்* 
  காத்தனே! காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

முன்பு - முன்பொருகால்
மூத்தவற்கு அரசு வேண்டி தூது எழுந்தருளி - பாண்டவர்களில் தலைவனான தருமபுத்திரனுக்கு ராஜ்யமளிக்க விரும்பித் தூது சென்றவனாய்,
மாத்து அமர் பாகன் வீழ மத கரி மருப்பு ஒசித்தாய் - மத்தகத்தின் மீது பொருந்தியிருந்த பாகனானவன் விழுந்து முடியும்படி (குவலயா பீடமென்னும்) மத யானையினுடைய தந்தங்களை முறித் (து அந்த யானையை ஒழித்)தவனே!
பூத்து அமர் சோலை ஓங்கி - புஷ்பித்து (வரிசையாகப்) பொருந்தியிருக்கிற சோலைகளானவை உயர்ந்து வளர்ந்திருக்கப் பெற்றதும்
புனல் பறந்து ஒழுகும் - ஜலமானது (அச்சோலைகளைச் சுற்றி) வியாபித்து பாயா நிற்கப்பெற்றதுமான

விளக்க உரை

மாத்தமர்பாகன் - ‘மஸ்தகம்’ என்னும் வடசொல் ‘மத்தகம்’ எனத் திரிந்து அது ‘மாத்து’ எனச் சிதைந்தது. மதகரி – வடசொல் தொடர்.

English Translation

O, Krishna! you upheid the elder brother's right to the throne and plied as a messenger, you killed the rutted elephant and the manhout, you reside where swirling waters make the groves grow tall in Nangur's Kavalampadi. You are my sole refuge!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்