விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  முனைமுகத்து அரக்கன் மாள*  முடிகள் பத்து அறுத்து வீழ்த்து*  ஆங்கு 
  அனையவற்கு இளையவற்கே*  அரசு அளித்து அருளினானே*
  சுனைகளில் கயல்கள் பாயச்*  சுரும்பு தேன் நுகரும் நாங்கைக்* 
  கனை கழல் காவளம் தண் பாடியாய்!*  களைகண் நீயே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

முனை முகத்து அரக்கண் மாள - யுத்தகளத்திலே இராவணன் முடியும்படியாக
பத்து முடிகள் அறுத்து வீழ்த்து - (அவனது) பத்துத் தலைகளையும் அறுத்துத் தள்ளி
ஆங்கு - அந்த லங்கையிலே
அனையவற்கு இளையவற்கே - அப்படிப்பட்ட ராவணனுடைய தம்பியான விபீஷணனுக்கு
அரசு அளித்தருளினானே - ராஜ்யத்தைத் தந்தருளினவனே!,

விளக்க உரை

(சுனைகளில் இத்யாதி.) வண்டுகள் பூக்களிலே படிந்து மதுபானம் பண்ணும்போது பெரிய கோலாஹலமாயிருக்கும்; அது தண்ணீரிலுள்ள மீன்களின் காதுகளில்படவே அவை தம்மேலே வண்டுகள் விழுகின்றனவாக நினைத்து அஞ்சிப் பாய்கின்றனவாம்.

English Translation

O, Krishna! You felled the ten crowned heads of the Rakshasa king and gave his kingdom to the younger brother Vibhishana. You reside in pleasure where fish drink and dance, while bees sing inebriated with nectar, in Nanguru's kavalampadi. You are my sole refuge!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்