விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சிலம்பின் இடைச் சிறு பரல்போல் பெரிய மேரு*  திருக் குளம்பில் கணகணப்ப திரு ஆகாரம் குலுங்க*
  நிலமடந்தைதனை இடந்து புல்கிக்*  கோட்டிடை வைத்தருளிய எம் கோமான் கண்டீர்* 
  இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும்*  ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும்* 
  சிலம்பிய நல் பெருஞ் செல்வம் திகழும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இலங்கிய - (பிரமாணங்களுள் சிறந்ததாக) விளங்குகின்ற
நால் மறை அனைத்தும் - எல்லா வேதங்களும்
அங்கம் ஆறும் - (வியாகரணம் முதலிய) ஆறு அங்கங்களும்
ஏழ் இசையும் - ஸப்தஸ்வரங்களும்
கேள்விகளும் - இதிஹாஸ புராணங்களும் (ஆகிய இவை)

விளக்க உரை

அண்டபித்தியிற் சார்ந்து கிடந்த பூமிப்பிராட்டியை அதனின்று ஒட்டுவிடு வித்தெடுக்கும்போது மேருமலையானது (வராஹமூர்த்தியின்) குளம்பில் ஒடுங்கிக் கிடக்கும்படி மிகப்பெரிய வராஹத் திருவுருவெடுத்ததாகப் புராணங்கள் கூறுவதை உட்கொண்டு இப்பாசுரமருளிச் செய்யப்பட்டது. “தீதறு திங்கள் பொங்கு சுடரும் பரும்பருலகேழினோடுமுடனே, மாதிரமண்சுமந்த வடகுன்று நின்ற மலையாறு மேழுகடலும், பாதமர்சூழ் குளம்பினக மண்டலத்தின் ஒருபாலொடுங்க வளர்சேர், ஆதிமுனேனமாகி அரணாய மூர்த்தியது” என விரிவாக அருளிச்செய்வது காண்க. வேதாந்த தேசிகனும் வரதராஜ பஞ்சாசத்ஸ்தோத்ரத்தில் “பாலாக்ருதேர்வடபலாசமி தஸ்ய யஸ்ய ப்ரூம்மாண்டமண்டலமபூது தரைகதேசே தஸ்யைவதத்வரத ஹந்தகதம் ப்ரபூதம் வாராஹமாஸ் திதவதோவபுரத்புதம் தே” என்று வராஹாவதாரத்தின் பெருமையில் ஈடுபட்டு பேசின ச்லோகமுணர்க. (சிறுபால் சிலம்பினிடைப் போல் பெரியமேரு திருக்குளம்பில் கணகணப்ப) என்ற புராண ச்லோகத்தை யடியொற்றி அருளிச்செய்கிறபடி. ஒரு தண்டைச் சிலம்பிலே மிகச்சிறிய பருக்காங்கல்லை யிட்டுவைத்தால், அது எப்படி கணகணவென்று ஒலிக்குமோ அப்படியே பெரிய மேருமலையானது வராஹநாயனாருடைய திருக்குளம்பிலே கணகணத்த தென்றவிதனால் மிகப்பெரிய மேருமலையும் ஒருகுளம்பின் ஏகதேசத்திலே ஒடுங்கும்படியாக வராஹ நாயனார் அத்தனைபெரிய வடிவுகொண்டாரென்பது விளக்கப்பட்டதாம். திருவாகாரம் குலுங்க – ‘அகலகில்லேனிறையும்’ என்று பிராட்டியிருக்கு மிருப்புக் குலுங்கும்படியாக.

English Translation

When the lord took the form of a boar and lifted Dame Earth on his tusk teeth, the big meru mount at his hooted foot was like a small stone that is placed in anklets to make a soft rattling sound as the foot moves. See, he is my lord Senkanmai residing at Nangur, -where the chanting of the four Vedas, the six Angas, and the seven Svaras in the eight Quarters, Softly reverberate through the wealthy city, -in his temple of Tirutetri Ambalam.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்