விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தான்போலும் ஏன்று எழுந்தான் தரணியாளன்*  அது கண்டு தரித்திருப்பான் அரக்கர் தங்கள்*    
  கோன்போலும் ஏன்று எழுந்தான் குன்றம் அன்ன*  இருபது தோள் உடன் துணித்த ஒருவன் கண்டீர்*
  மான்போலும் மென் நோக்கின் செய்ய வாயார்*  மரகதம்போல் மடக் கிளியைக் கைமேல் கொண்டு* 
  தேன்போலும் மென் மழலை பயிற்றும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மான் போலும் மென் நோக்கின் - மானின் நோக்குப்போன்ற அழகிய நோக்கையுடையராய்
செய்ய வாயார் - சிவந்த அதரத்தையுமுடையரான பெண்கள்
மரகதம் போல் - மரகதப்பச்சை போலே பசுமையாய்
மடம் - அழகியதான
கிளியை - கிளிப்பிள்ளையை

விளக்க உரை

இப்பாட்டின் முன்னடிகட்குப் பொருள் சொல்லுவது ஸூக்ஷம புத்திசாலிகளுக்கன்றி மற்றையோர்க்கு இயலாது. முற்காலத்தில், ஆப்பான் திருவழுந்தூரரையர் என்கிற ஒருஸ்வாமியும் இன்னுஞ்சில முதலிகளுமாக இதற்குப் பொருள் என்னவென்று ஆராயத் தொடங்கினர்; அவர்கட்குப் பொருள் தோன்றவில்லை; அப்போது பட்டர் மிகச் சிறுபிராயத்தவராயிருந்தார்; அப்போது அருளிச்செயல் மூலம் ஓதியிந்தாரல்லர் பட்டர்; ஆனாலும், பட்டர் சிறுபிராயமே தொடங்கி எல்லாவழிகளிலும் தமது ஸூக்ஷமபுத்தியைச்செலவிட்டுப் பலவகையான அர்த்த விசேஷங்களை வெளியிட்டுக்கொண்டு ஆச்சரியமாக விளங்கி வந்தமையால் பல பெரியோர்களும் பட்டரைப் பணிந்து அர்த்தங்கள் கேட்பதுண்டு; அப்படியே கீழ்ச்சொன்ன அரையர் மதலானாரும் பட்டரிடம் சென்று ‘ இப்பாட்டுக்குப் பொருள் என்ன?’ என்று கேட்டனர்; அப்போதே பட்டர் ‘பாசுரத்தை விளங்கச்சொல்லுங்கள்’ என்று சொல்லி ஒருகால் பாசுரத்தைக் கேட்டவாறே, “தான்போலும் என்றெழுந்தான் தரணியாளன் அதுகண்டு தரித்திருப்பானரக்கர் தங்கள் கோன்போலும்” என்கிற வரையில் இராவணன் வார்த்தையின் அநுவாதம் - என்று சொல்லிப் பொருளை விளக்கிக்காட்டினர். இங்கே வியாக்கியான வாக்கியம் வருமாறு :- “ஆப்பான் திருவழுந்தூரரையரும் மற்றுமுள்ள முதலிகளுமாக ‘இப்பாட்டிற் சொல்லுகிறதென்?’ என்று பட்டருக்கு விண்ணப்பஞ்செய்ய, ஒருகால் இயலைக் கேளா, ‘ராவணன் வார்த்தைகாண்’ என்றருளிச் செய்தார். (தான்போலுமித்யாதி) ஒரு க்ஷத்ரியன்போலே எதிரியென்று வந்தான்; அதுகண்டு தரித்திருப்பான் ராக்ஷஸராஜனாம் - என்று கிளர்ந்தெழுந்த ராவணனுடைய மலைபோலேயிருக்கிற இருபது தோளையும் துணித்த தனிவீரன்கிடீர்” என்று.

English Translation

"Are you any match for me?", the strong Rakshasa king challenged, whereupon the Valiant Earth-ruler Lord returned the challenge, and destroyed the twenty arms and all of the Rakshasa, see, he is my senkankal, residing of Nangur, -where tawn-eyed red-lipped dames hold their emerald-like pretty parrots on their hands and teach them to speak honey-sweet tender cajolling words, -in his temple of Tirutetri Ambalam.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்