விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வார் ஆரும் முலை மடவாள் பின்னைக்கு ஆகி*  வளை மருப்பின் கடுஞ் சினத்து வன் தாள் ஆர்ந்த* 
  கார் ஆர் திண் விடை அடர்த்து வதுவை ஆண்ட*  கரு முகில்போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்*
  ஏர் ஆரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும்*  எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதிச்* 
  சீர் ஆரும் மணி மாடம் திகழும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஏர் ஆரும் மலர் பொழில்கள் - அழகுபொருந்திய புஷ்பங்களையுடைய சோலைகளானவை
எங்கும் தழுவி - ஆகாசமுள்ளவளவும் வியாபித்து
எழில் மதியை - அழகிய சந்திரனை
கால் தொடர - (அசையவொட்டாமல்) பால் கட்டப்பெற்றதும்
விளங்கு சோதி சீர் ஆரும் மணி மாடம் திகழும் - விளங்குகின்ற ஒளியையுடைய அழகிய மணிமாடங்கள் பிரகாசிக்கப்பெற்றதுமான

விளக்க உரை

English Translation

See, the Lord Krishna of dark-cloud hue, who fought with seven strong-horned heavy-footed bulls and married Dame Nappinnai is my senkanmai who resides at Nangur, -where the breeze blows through flower gardens wafting fragrance, then stops the moon over jewelled mansions, -in his temple of Tirutetri Ambalam.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்